Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

சென்னை: `அறை முழுவதும் ரத்தம்; பூட்டிய வீட்டுக்குள் பெயின்டர் கொலை!' - சிக்கிய நண்பர்

சென்னை எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்தவர் தீபக் என்கிற பஷீர் ( 28) இவர் பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். அவரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார். திருமணத்துக்காக தீபக், மதம் மாறியதோடு தன்னுடைய பெயரை பஷீர் என்று மாற்றிக் கொண்டார். பஷீரும் அதே பகுதியைச் சேர்ந்த சைமனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் வேலை இல்லாத நாள்களில் ஒன்றாக மது அருந்துவார்கள்.

கொலை

நேற்று மதியம் எம்.எம்.டி.ஏ காலனி திருப்பூர் குமரன் தெருவில் உள்ள பஷீரின் மாமனார் வீட்டில் யாரும் இல்லை. அதனால் அங்கு சென்ற பஷீரும் சைமனும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இருவரும் பேசினர். அப்போது இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறியதும் இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கியிருக்கிறார்கள்.

இதில் ஆத்திரமடைந்த பஷீர், தன்னுடைய நண்பன் சைமனின் தொண்டையில் காய்கறிகளை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியால் குத்தியுள்ளார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் சைமன் மயங்கியுள்ளார். அதைப்பார்த்த பஷீர் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சைமனை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இந்தச் சம்பவம் நேற்று மதியம் நடந்துள்ளது. பின்னர், பஷீரின் மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தன்னிடம் உள்ள சாவியைக் கொண்டு வீட்டை திறந்துள்ளார். அப்போது அறை முழுவதும் ரத்தமாக காட்சியளித்தது. சைமன் இறந்து கிடப்பதைப் பார்த்த பஷீரின் மாமனார் அதிர்ச்சியடைந்தார்.

Also Read: சென்னை: `மூன்று கொலைகள்; 51 வழக்குகள்' - ரௌடி சங்கர் என்கவுன்ட்டர் பின்னணி

கொலை

பின்னர் இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பஷீரின் மாமனார் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சைமனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஷீரின் மாமனாரிடம் போலீஸார் விசாரித்தபோது வீட்டு சாவி, தன்னுடைய மருமகன் பஷீர், மகள் ஆகியோரிடம் இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து பஷீரை போலீஸார் தேடியபோது அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் அவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து போலீஸார் பஷீரை பிடித்து விசாரித்தபோது சைமனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதனால், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அரும்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/painter-murdered-in-chennai-arumbakkam-police-arrests-his-friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக