Ad

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

சென்னை: மகளிடம் தவறாக நடந்த தந்தை; காட்டிக்கொடுத்த பாட்டி! - போதையால் மாறிய பாதை

சென்னை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு பேத்தியை அழைத்துக் கொண்டு மூதாட்டி ஒருவர் வந்திருந்தார். அவரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்ன பிரச்னை என்று விசாரித்தார். அப்போது மூதாட்டி, தன்னுடைய பேத்தியிடம் மகனே குடிபோதையில் தவறாக நடப்பதாகக் கண்ணீர்மல்கக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், மூதாட்டியிடம் நடந்தவற்றை கேட்டிருக்கிறார்.

Representational image

அதைக்கேட்ட ஆவடி அனைத்து மகளிர் போலீஸார், அதிர்ச்சியடைந்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் தனியாக விசாரித்தனர். அப்போது அவரும் தனக்கு நடந்த கொடுமைகளை போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் தந்தை மூர்த்தியிடம் (36) போலீஸார் விசாரித்தனர். அப்போது மூர்த்தி, குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, மூர்த்தியை போலீஸார் கைது செய்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

Also Read: சிவகங்கை: ஹாக்கி பயிற்சி; மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! - போக்சோவில் பயிற்சியாளர் கைது

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட மூர்த்தி, ஆவடியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதனால், மகளுடன் மூர்த்தி வசித்துவந்தார். இந்தச் சமயத்தில் குடிபோதைக்கு அடிமையான மூர்த்தி, பெற்ற மகளிடமே தவறாக நடந்துள்ளார். நீண்டகாலமாக இந்தக் கொடுமை தொடர்ந்துள்ளது.

மூர்த்தி

தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் 14 வயது சிறுமி தவித்துக் கொண்டிருந்துள்ளார். இந்தச் சமயத்தில்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை அவரின் பாட்டிக்கு தெரியவந்துள்ளது. மூதாட்டி அளித்த புகாரின்பேரில் மூர்த்தியை கைது செய்துள்ளோம்" என்றனர். இந்த சம்பவம் ஆவடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-avadi-police-arrested-man-in-pocso-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக