Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

``நான் பிழைக்கத் தெரியாத ஆளாம்!" - பறவைகளுக்கு உணவளிக்க பயிரிடும் விவசாயி

எந்தக் காலத்திலும், பிற உயிரினங்களைப் பற்றி யோசிக்க நேரமில்லாத நம் பரபரப்பான வாழ்வியல் முறையில், இந்தக் கொரோனா நெருக்கடிக் காலம் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆனால், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்து முருகன் என்ற விவசாயி விதிவிலக்குதான்.

அவர், குளத்துப் பாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை நன்கு உணர்ந்த முத்து முருகன், பறவைகளுக்கு உணவளிப்பதற்காக, அரை ஏக்கரில் கம்பு மற்றும் சோளம் பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து, குருவிகள், கிளிகள் மற்றும் மயில்கள் என 100-க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு அட்சய பாத்திரமாக உணவளித்து வருகின்றன.

வயலில் பறவை

``இயற்கையோடு இணைந்து இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், பறவைகளுக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் அரை ஏக்கர் பூமியில் சோளம் மற்றும் கம்பு பயிரிட்டேன். அதில் சோளம் கை கொடுக்கவில்லை. கம்பு நன்கு வளர்ந்தது. ஆடி மாதத் தொடக்கத்திலேயே அது பறவைகளுக்கு உணவாக மாறியது.

புவி வெப்பமயமாதல் பிரச்னை உலகை அச்சுறுத்தி வருகிறது. நிறைய உயிரினங்கள் காணாமல் போகும் அபாயத்தில் இருக்கின்றன. இது போன்ற சின்னச் சின்ன செயல்பாடுகளால் தான் பாதிப்புகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறேன். பறவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதால்தான், கம்பு, சோளத்தைப் பயிரிடும்போது அது உணவு தேடி இங்கு வருகிறது. அதைப் பிரச்னையாகப் பார்க்காமல், பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...

`பிழைக்கத் தெரியாத ஆள்' என்று என்னை வசைபாடுபவர்கள் அதிகம். என் குடும்பத்தினரும் கூட அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால், மற்றவர்களுக்கு ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பணியைத் தொடர உள்ளேன்.

அடுத்தகட்டமாக, என்னுடைய தோட்டத்தின் மற்றொரு பகுதியில் பறவைகளுக்காகக் கம்பு பயிரிட உள்ளேன். பறவைகள் அடிக்கடி வரும்போது, நம் நிலத்தில் அதன் எச்சம் விழும். அந்தப் பகுதியே ஒரு உயிர்ச் சூழலாக மாறும். அது, விவசாயத்துக்கு உற்ற நண்பான இருக்கும்" என்றார் முத்து முருகன்.

- முத்து முருகனின் பின்புலத்தையும் அறியவும், அவரது தோட்டத்தில் வலம் வரவும், சூழலியல் பிரச்னைகள் தொடர்பாக அவர் கூறும் எளிமையான விளக்கத்தை உள்வாங்கவும் பசுமை விகடன் இதழில் முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க > https://bit.ly/32mz0kC

> பறவைகளுக்கு உணவகம்... பசிப்போக்கும் விவசாயி! https://bit.ly/32mz0kC
வயலில் பறவைகள்

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
Pasumai Youtube Channel

இதுபோன்ற விவசாயம் தொடர்பான செய்திகள் மற்றும் பயனுள்ள வீடியோக்களைக் காண பசுமை விகடன் யூ-டியூப் சேனலுக்கு வாங்க. பசுமை விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய: bit.ly/pasumaiYoutube



source https://www.vikatan.com/news/agriculture/a-farmer-who-doing-farming-to-solely-feed-birds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக