Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

சூட்சும திருஷ்டியை நேர்மறை ஆற்றலாக மாற்றி உடலை மனதை வளப்படுத்தும் பிராண சக்தி யோகா!

நம் ஸ்தூல உடலைச் சுற்றி சூட்சுமமான ஒளி உடம்பும் உள்ளது என்று அறிவீர்கள். இந்த சூட்சும உடம்பின் 'உணர்ந்து கொண்டு தெரிவிக்கும் பார்வை ஆற்றலைத்தான் சூட்சும திருஷ்டி' என்கிறோம். அதாவது சாதாரண கண்களால் உணரமுடியாத பல விஷயங்களை இந்த சூட்சும திருஷ்டி உணர்ந்து அறிந்து கொள்ளும் திறன் கொண்டது. முதன்முதலாக சந்திக்கும் ஒருவரைப் பல காலம் பழகியவரைப்போல உணர்வோம். புதிதாகச் சென்ற ஒரு இடத்தை அடிக்கடிப் பார்த்து வந்துள்ளதைப்போல நினைப்போம். இதெல்லாம் சூட்சும திருஷ்டி உங்களுக்குள் செய்யும் ஜாலங்கள்.

பிராண சக்தி யோகா முதல் பயிற்சி

ரிஷிகள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே விண்வெளியில் உலாவும் பல விண்மீன்களைக் கண்டு ஜோதிடம் கணித்ததும், சித்தர்கள் அமர்ந்த இடத்தில் இருந்தே எங்கோ நடைபெறும் விஷயங்களை அறிந்து சொன்னதும் இந்த சூட்சும திருஷ்டியால்தான். பிறகு நடக்கப்போவதை உணர்ந்து கொண்டு முன்பே எச்சரிக்கும் ஞானிகளுக்கு இந்த சூட்சும திருஷ்டி கைவந்ததே காரணம் எனலாம்.

Also Read: நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் எளிமையான 7 பயிற்சிகள்... சித்தர்கள் அருளிச்செய்த பிராண சக்தி யோகா!

ஒவ்வொருவராலும் உணர முடிந்த இந்த சூட்சும திருஷ்டியை வளப்படுத்தி அதை நேர்மறையான ஆற்றலாக நம்முள் செலுத்தி உடலையும் மனதையும் ஆனந்தமாக்கும் பயிற்சியே நம் முதல் பயிற்சி. சூட்சும திருஷ்டியை நல்ல அதிர்வாக மாற்றி நம்முள் தக்கவைத்துக் கொள்ளும்போது நம் உடல் உள்ளுறுப்புகள் வளமாகின்றன. கூர்மையான கண் பார்வை பெறமுடிகிறது. நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் உள்ளுணர்வைப் பெறலாம். ஞான திருஷ்டி, தூர திருஷ்டி என்றெல்லாம் புராணங்களில் கூறப்பட்ட இந்த சூட்சும திருஷ்டி ஆற்றலை வளப்படுத்த இந்த முதல் பயிற்சியைக் கற்றுக்கொள்வோம் வாருங்கள்!

பிராண சக்தி யோகா முதல் பயிற்சி

பயிற்சியை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவை:

  • இந்தப் பயிற்சிகளைத் தகுந்த குருவின் மூலமே கற்க வேண்டும்.

  • இரவில் செய்வது கூடாது. மூச்சு சம்பந்தப்பட்டது என்பதால் சிக்கல் வரலாம். சூரிய பகவானே பிராண சக்தியின் அதிபதி என்பதால் சூரியன் உதிக்கும் காலை அல்லது அந்தி மாலை நேரம் உகந்தது.

  • உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியைச் செய்ய வேண்டும்.

  • நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

  • உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது. மிகுந்த பசியிருப்பின் கொஞ்சமாக கஞ்சி அல்லது பழங்கள் எடுத்துக்கொண்டு செய்யலாம்.

  • உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

பயிற்சி நாள்: 6.9.2020

நேரம்: காலை 7.00 மணி முதல் 8.30 வரை

இந்தப் பயிற்சி வகுப்பில் நீங்களும் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/spiritual/news/prana-sakthi-yoga-online-event-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக