Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

`ஒரே நாளில் 75,760 பேருக்கு தொற்று; 60 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை!’ - இந்தியாவில் கொரோனா நிலவரம் #NowAtVikatan

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 75,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா சோதனை

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 1,023 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60,472 -ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,23,772-ஆகவும் உயர்ந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தை - துணை முதல்வர் ஆய்வு!

துணை முதல்வர் பன்னீர் செல்வம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு இட மாற்றம் செய்யப்பட்டது. புதிய சந்தையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வந்தது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையை திறப்பது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பின்னர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

41-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜிஎஸ்டி

41 -வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடக்கிறது. மாநில நிதியமைச்சர்களுடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜிஎஸ்டி நடைமுறைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெறும்.



source https://www.vikatan.com/news/general-news/27-08-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக