Ad

புதன், 26 ஆகஸ்ட், 2020

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: லாக்கரில் இருந்த பணம், நகை... ஸ்வப்னாவுக்கு கிடைத்தது எப்படி?

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்ட வழக்கை என்.ஐ.ஏ, சுங்கத்துறை உள்ளிட்டவை விசாரணை நடத்தின. இப்போது அமலாக்கத்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலரது வாக்குமூலங்களால் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்குமேல் பணம் மற்றும் ஒரு கிலோ தங்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்வப்னாவும் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் வேணுகோபாலனும் சேர்ந்து ஒரு வங்கியில் லாக்கர் எடுத்துள்ளனர். அதில் இருந்து பணம் மற்றும் நகைகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அமலாக்கத்துறை சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் வேணுகோபாலனிடன் விசாரணை நடத்தியது. வேணுகோபாலன் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில், "கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனின் உத்தரவின்பேரில்தான் ஸ்வப்னாவுடன் சேர்ந்து கூட்டாக லாக்கர் எடுக்க கையெழுத்து போட்டேன். இதனால் எனக்கு சட்டச்சிக்கல் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது" என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன்

ஆனால் ஸ்வப்னா இதுபற்றி அளித்த வாக்குமூலத்தில், "கேரள அரசின் லைஃப் திட்டத்தின் கீழ் துபாய் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுத்தது. அதற்காக யு.ஏ.இ தூதரகம் மூலம் எனக்கு ஒரு கோடி ரூபாய் கமிஷன் கிடைத்தது. அந்தப் பணத்தை நான் வங்கியில் டெப்பாசிட் செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் கூறியதன் பெயரிலேயே லாக்கரில் பணத்தை வைத்தேன்" என்றார். லைஃப் வீடுகள் கட்டும் திட்டத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் ஸ்வப்னா, சிவசங்கரன் கோஷ்டிக்கு 4.25 கோடி கமிஷனாக வழப்க்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பணத்தை இவர்கள் பங்கு வைத்து எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

Also Read: பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

அமலாக்கத்துறைக்கு சிவசங்கரன் அளித்த வாக்குமூலத்தில், "நான் தலைமைச் செயலக அலுவலகத்தில் இல்லாத சமயத்திலும் ஸ்வப்னாவும், ஸரித்தும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். நான் இல்லாதபோது யாரை பார்க்க அவர்கள் வந்தார்கள் என எனக்கு தெரியவில்லை" என கூறியுள்ளார். ஆனால் ஸ்வப்னா மற்றும் சந்தீப் ஆகியோர் சிவசங்கரனிடம் மட்டுமே நட்பில் இருந்ததாக கூறியுள்ளார். எனவே தலைமைச் செயலக சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தால்தான் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியும் என இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ, சுங்கத்துறை உள்ளிட்ட ஏஜென்சிகள் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.

ஸ்வப்னா வழக்கு

இந்த நிலையில் ஸ்வப்னாவை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த கேரள போலீஸார் முயற்சித்து வருகின்றனர். ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மேல் அதிகாரிகள் மீது பொய் புகார் கொடுத்தது குறித்து ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக கேரள போலீஸார் இந்த முயற்சியைமேற்கொண்டு வருகின்றனர். தங்கம் கடத்தல் வழக்கில் 25 குற்றவாளிகளில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேரளா: `தூதரக அதிகாரியுடன் இணைந்து ரியல் எஸ்டேட்?’ - ஸ்வப்னா லாக்கரில் சிக்கிய பணம், தங்கம்



source https://www.vikatan.com/government-and-politics/crime/kerala-gold-smuggling-case-how-did-swapna-got-the-money-gold-that-was-in-locker

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக