Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

"வனிதா விஜயகுமார் வெளியேற நானா காரணம்?"- ரம்யா கிருஷ்ணனின் பதில் என்ன?

'BB ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், தனக்கும் விஜய் டிவிக்கும் எந்தப் பிரச்னையுமில்லை என்றும் ஒரு சில தனிநபர்களால்தான் தான் வெளியேறுவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். வனிதா விஜயகுமார் குறிப்பிட்ட அந்த தனிநபர், 'BB ஜோடிகள்' நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான நடிகை ரம்யா கிருஷ்ணன்தான் என்கிற தகவல் தற்போது கசிய சம்பவம் குறித்து விசாரித்தேன்.

வனிதா விஜயகுமார் அறிக்கை

'BB ஜோடிகள்' நிகழ்ச்சியின் ஷூட்டிங் யூனிட்டில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினேன். " 'ஆண் மட்டுமல்ல பெண்ணுக்குப் பெண்ணும் எதிரியாக இருக்காங்க'னு அவங்க குறிப்பிட்டதுல இருந்தே அவங்க ரம்யா கிருஷ்ணனைத்தான் சொல்றாங்கனு புரிஞ்சுக்கலாம். கடந்த ஷூட்டிங்கின்போது அவங்களுடைய பர்ஃபார்மன்ஸூக்கு ரம்யா கிருஷ்ணன் தந்த கமென்ட்ஸ்தான் வனிதாவைக் காயப்படுத்திட்டதா தெரியுது.

ஆனா, ரம்யாவைப் பொறுத்தவரைக்கும் விருப்பு வெறுப்பில்லாமத்தான் செயல்படறதாச் சொல்றாங்க" என்ற அவர்கள், ஒரு பர்ஃபாமன்ஸில் ரம்யா கிருஷ்ணன் வனிதாவுக்கு பத்துக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே தந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்

இந்த ஒரு மார்க்தான் வனிதாவைப் பொங்கி எழ வைத்து, நிகழ்ச்சியிலிருந்தே வெளியேறுவதற்கும் காரணமாகி விட்டதாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களிலும் வனிதாவின் முடிவுக்கு ரம்யா கிருஷ்ணனே காரணம் என விவாதிக்கப்பட்டு வர, ரம்யா கிருஷ்ணனிடமே பேசினேன்.

"அவங்கதான் ஏதேதோ சொல்லியிருக்காங்களே... மேற்கொண்டு பிக்பாஸ் ஜோடிகள் ஷூட்டிங்ல என்ன நடந்ததுன்னு நீங்க வனிதாவையே கேளுங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. மீறி இந்த விஷயம் தொடர்பா என்னுடைய கருத்து வேணும்னா, அதுக்கு நோ கமென்ட்ஸ்தான்" என முடித்துக் கொண்டார்.



source https://cinema.vikatan.com/television/the-reason-behind-vanitha-vijayakumar-walking-out-of-bb-jodigal-program

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக