Ad

வியாழன், 29 ஜூலை, 2021

மதுரை: சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து பணம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர்! - அதிரடிகாட்டிய எஸ்.பி

தொழில் முதலீட்டுக்காக அர்ஷத் என்பவர் வைத்திருந்த பத்து லட்சம் ரூபாயை, சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து பறித்துக்கொண்ட புகாரில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். பேக் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். இவர் மதுரை எஸ்.பி பாஸ்கரனிடம் கொடுத்த புகாரில், `வில்லாபுரத்தில் பேக் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்த நான், தனியாக தொழில் செய்ய உறவினர்களிடம் கடன் வாங்கி பத்து லட்ச ரூபாயுடன், பாண்டி என்பவரிடம் மேலும் கடன் பெற கடந்த 5-ம் தேதி நாகமலை புதுக்கோட்டைக்குக்ஷ் சென்றேன். வீட்டில் போய் பணத்தை எடுத்துவருவதாகக்ஷ் சொன்ன பாண்டி என்னை அங்கே இருக்கக்ஷ் சொல்லிவிட்டுப் போனார்.

அந்த நேரம் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் வசந்தி, நான் வைத்திருந்த பத்து லட்ச ரூபாயைப் பறித்துக்கொண்டு, `நாளை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பணத்தைப் பெற்றுக்கொள்’ என்று கூறிவிட்டுச் சென்றார். மறுநாள் போய்க் கேட்டதற்கு, `உன் பையில் எந்தப் பணமும் இல்லை. இனி இங்கு வராதே, இனி பணத்தைப் பற்றி பேசினால் உன்மேல் கஞ்சா வழக்கு போட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார். என் பணத்தை மீட்டு இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

மோசடி

எஸ்.பி பாஸ்கரன், இந்தப் புகாரை விசாரிக்க ஏ.டி.எஸ்.பி சந்திரமெளலிக்கு உத்தரவிட்டார். விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகச் சிலர் கூறியதை நம்பி அர்ஷத் பணத்துடன் நாகமலைப் புதுக்கோட்டைக்கு வந்திருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட உக்கிரபாண்டியன், பால்பாண்டி, கார்த்திக், பாண்டியராஜாவுடன் இன்ஸ்பெக்டர் வசந்தியும் சேர்ந்துகொண்டு அவரிடம் பணம் பறித்தது தெரியவந்தது.

பணத்தை இழந்த அர்ஷத் இதை யாரிடமும் புகார் செய்ய மாட்டார் என்று நினைத்த நிலையில் எஸ்.பி-யிடம் புகார் செய்ததால் இன்ஸ்பெக்டர் சிக்கியிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் வசந்தி உட்பட ஐந்து பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இன்ஸ்பெக்டர் வசந்தி

சீட்டிங் கும்பலுடன் சேர்ந்து இன்ஸ்பெக்டர் வசந்தி பணம் பறித்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்மீது இதுபோல் இன்னும் பல புகார்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Also Read: திருத்தணி: `அரசு வேலை ஆசை; பல லட்சம் ரூபாய் மோசடி!' - முகநூல் விளம்பரத்தால் சிக்கிய நபர்



source https://www.vikatan.com/news/crime/women-police-inspector-suspend-in-money-cheating-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக