Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

Covid Questions: கோவிட் குணமான பின் ஆன்டிபாடி அளவு 92.5 இருக்கிறது; நான் தடுப்பூசி போடலாமா?

எனக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளேன். சுமார் 70 நாள்களுக்குப் பின் கோவிட் ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்ததில் ஆன்டிபாடி அளவு 92.5 என உள்ளது (1gm+1gg+1ga). நான் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

- சையது அபுதாகிர் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் பூங்குழலி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.

``கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமானவர்கள், தொற்றுக்கான அறிகுறிகள் ஆரம்பித்ததிலிருந்து 90 நாள்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது ஆன்டிபாடி அளவு. ஒரு நோய் உடலைத் தாக்கும்போது அதற்கு எதிராக ஆன்டிபாடிக்களை உடல் உருவாக்குகிறது. அதன் அளவீடுதான் நீங்கள் குறிப்பிட்டிருப்பது. அதற்கும் தடுப்பூசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆன்டிபாடிக்களின் அளவைப் பொறுத்து இவ்வளவு இருந்தால்தான் தடுப்பூசி போட வேண்டும் இல்லையேல் போடக் கூடாது என்றெல்லாம் எதுவுமில்லை.

Antibody -Representational Image

Also Read: Covid Questions: நியூரோஃபைப்ரோமடோசிஸ் (Neurofibromatosis) பாதிப்பு இருக்கிறது; தடுப்பூசி போடலாமா?

கோவிட் தொற்று ஏற்பட்டு குணமானால் அந்த நோயால் உண்டான இயற்கையான எதிர்ப்புத்திறன் சில நாள்களுக்கு உடலில் இருக்கும். அதனால்தான் நோய்த்தொற்றுக்கு உள்ளாகி, குணமான மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எனவே, நீங்கள் தாராளமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்."

Also Read: Covid Questions: ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/how-do-i-know-that-my-antibody-levels-are-okay-to-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக