Ad

செவ்வாய், 27 ஜூலை, 2021

கோவை: குடிபோதையில் தகராறு செய்த மகன்! - அடித்து கொன்ற தந்தை கைது

கோவை மாவட்டம், பேரூர் அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 62). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, "மகிழ்ச்சி" என்ற பெயரில் ஓர் ஹோட்டல் கடையை நடத்தி வருகிறார். கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக ஹோட்டல் கடைக்கான வாடகையை கொடுக்க முடியவில்லை.

கோவை

இதனால் அந்த இடத்தின் உரிமையாளர் கணேஷ் என்பவர் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து, பாக்கியநாதன் நேற்று காலை கடையை காலி செய்வதற்காக பொருள்களை எடுத்துள்ளார். அப்போது, பாக்கியநாதனின் மகன் சபரிநாதன் (வயது 33) அங்கு சென்றுள்ளார். குடிபோதையில் இருந்த சபரிநாதனுக்கும், அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாக்கியநாதன்

'என்னை கேட்காமல் கடையை ஏன் காலி செய்கிறாய்?' என்று சபரிநாதன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, தந்தை பாக்கியநாதனை கையால் அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார் சபரிநாதன்.

இதன் காரணமாக, பாக்கியநாதனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாக்கியநாதன், வீட்டில் இருந்த இரும்புசுத்தி மற்றும் மூங்கிலால் சபரிநாதனை சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

சபரிநாதன்

இதையடுத்து, குடும்ப தகராறில் மகனை தாக்கிவிட்டதாக பாக்கியநாதனே பேரூர் காவல்நிலையத்தில் சரணடைந்துவிட்டார். பிறகு சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சபரிநாதன் உடலை மீட்டனர். மேலும், பாக்கியநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Also Read: ஜீன்ஸ் அணிந்ததால் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி; உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!



source https://www.vikatan.com/news/crime/coimbatore-father-killed-son-in-family-issue-surrendered-to-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக