Ad

வியாழன், 29 ஜூலை, 2021

சோதனையில் சிக்கிய 92 துப்பாக்கிக் குண்டுகள்!-கோவை விமான நிலையத்தைப் பரபரப்பாக்கிய தொழிலதிபர்

திருப்பூர் மாவட்டத்தில் பனியன் நிறுவனம் நடத்திவருபவர் சசிக்குமார். இவர் நேற்று மாலை தொழில் நிமித்தமாக சென்னைக்குச் செல்வதற்காக கோவை விமானம் நிலையத்துக்கு வந்தார். அவரது உடைமைகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கோவை விமான நிலையம்

அப்போது, அவர் கொண்டு வந்த பையில் 92 துப்பாக்கிக் குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சசிக்குமாரிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

Also Read: விழுப்புரம்: துப்பாக்கி முனையில் அடுத்தடுத்து கொள்ளை - தீரன் பட பாணியில் மர்ம கும்பல் துணிகரம்

இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிக் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கும், பீளமேடு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சசிக்குமார்

சசிக்குமாரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முறையாக அனுமதி பெற்று துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பது தெரியவந்தது. 25 m.m அளவுகொண்ட அந்தக் குண்டுகளை அவர் தவறுதலாக எடுத்துவந்ததாகக் கூறியிருக்கிறார்.

ஆனாலும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், சசிக்குமாரிடம் பறிமுதல் செய்த துப்பாக்கிக் குண்டுகளை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் துப்பாக்கிக் குண்டுகள் எடுத்து வரப்பட்டது குறித்து சசிக்குமாரிடம் பீளமேடு போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

துப்பாக்கிக் குண்டுகள்

92 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது கோவை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/92-bullets-seized-from-a-business-man-in-coimbatore-airport

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக