Ad

புதன், 28 ஜூலை, 2021

விழுப்புரம்: பழைமையான கோயில் சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது! - 2 பிரிவுகளின் கீழ் வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் இருக்கிறது பெருமுக்கல். இங்குள்ள மலைமீது சோழர் காலத்தைச் சேர்ந்த சிவன் ஆலயம் (முக்யாசலேஸ்வரர்) ஒன்று உள்ளது. மலையின் அடிவாரத்தில் காமாட்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு அறங்காவலராக இருக்கும் ராமு (63) என்ற நபர், கடந்த 23-ம் தேதி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்த சிவலிங்கத்தை உடைத்து, அங்கு குழி தோண்டியிருக்கிறார். மறுதினம் அவ்வழியே வந்த மக்கள் சிலர், சிவலிங்கம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர், விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட ராமு.

Also Read: முந்திரித் தோப்பில் கிடந்த சாமி சிலை! கைவரிசைகாட்டிய சிலைகடத்தல் கும்பல்

அறங்காவலரான ராமுவிடம் விசாரித்தபோது முரணான பதில்களே வெளிவந்திருக்கின்றன. அவரிடம் காவல்துறையினர் மேலும் விசாரித்தபோது சிலையை உடைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். 'சிவனே கனவில் வந்து அங்கு தோண்டச் சொன்னதாக' அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. அவர்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரம்மதேசம் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``சிலை உடைக்கப்பட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில், விசாரணையை மேற்கொண்டோம். ராமு (எ) அப்பு எனும் நபரைக் கைதுசெய்திருக்கிறோம். சிலையைச் சேதப்படுத்தி, உடைத்ததற்காக அவர்மீது இரு பிரிவுகளின் கீழ் (295(a), 464/2 ) வழக்கு பதிவு செய்திருக்கிறோம்" என்றார்கள்.

உடைக்கப்பட்ட சிவலிங்கம்

பழைமையான ஆலயத்தில், தொன்மை வாய்ந்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/police-have-arrested-a-man-for-breaking-an-ancient-statue-in-villupuram-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக