Ad

வெள்ளி, 30 ஜூலை, 2021

`ஒரு பேருந்துக்கு ரூ.9,000!’ - மகாராஷ்டிரா அரசு பேருந்துகளில் வைரஸ் எதிர்ப்பு ரசாயணம்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கு பிறகு பொதுமக்கள் நோய் தொற்று பயம் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். மும்பையில் புறநகர் பஸ்களிலும் பயணம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால் அச்சத்துடனேயே மக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் பயத்தை போக்க மகாராஷ்டிரா சாலை போக்குவரத்து கழகம் அரசு பஸ்களில் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகள் எதிர்ப்பு ரசாயானத்தை தெளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் பஸ்களில் ரசாயான தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா அரசு பஸ்

ஒவ்வொரு பஸ்ஸுக்கு ரசாயானம் தெளிக்க ரூ.9 ஆயிரம் செலவாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது போன்ற ரசாயானம் வழக்கமாக முக்கிய அரசு அலுவலகம் மற்றும் ஏர்லைன்ஸ்களில் தெளிக்கப்படுவது வழக்கம். எனவே இது போன்ற ரசாயானம் தெளிக்கப்படுவதன் மூலம் பொதுமக்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய இருக்கும் அச்சம் நீங்கும் என்று மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக்கழக துணைத்தலைவர் சேகர் தெரிவித்தார்.

பஸ்சின் இருக்கைகள், கைபிடிகள், ஜன்னல்கள், டிரைவர் கேபின், பஸ்தளம், கதவு போன்ற பகுதியில் தெளிக்கப்பட இருக்கிறது. இந்த ரசாயானம் தெளிக்க ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும். ஒரு நிறுவனம் தெளிக்கும் ரசாயான தாக்கம் இரண்டு மாதத்திற்கும், மற்றொரு நிறுவனம் தெளிக்கும் ரசாயானத்தின் ஆயுள் காலம் 6 மாதத்திற்கும் இருக்கும்.

கிருமிநாசினி தெளிப்பு

எனவே ஒரு நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறையும், மற்றொரு நிறுவனம் ஆண்டுக்கு 6 முறையும் ரசாயானம் தெளிக்கும் பணியை மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மூன்றாவது நிறுவனம் இந்த ரசாயான தெளிப்பை சோதனை செய்து சான்று வழங்கும். மகாராஷ்டிரா அரசு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 18 ஆயிரம் பஸ்கள் இருக்கிறது. இதில் கொரோனாவிற்கு முன்பு தினமும் 65 லட்சம் பேர் பயணம் செய்தனர். இப்போது தினமும் 18 லட்சம் பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.



source https://www.vikatan.com/news/india/maharashtra-government-buses-spray-anti-fungal-anti-bacterial-chemical-to-prevent-the-spread-of-corona-virus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக