Ad

வெள்ளி, 2 ஜூலை, 2021

பொய் பேசுனா கண்டுப்பிடிக்குறது ஈசி..! - வாக்கிங் டாக்கிங் 8 #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று நடக்க ஆரம்பிக்கும் போது பசிக்கிற உணர்வு..

பசித்தால் சாப்பிடலாம் என வீட்டில் திருமதி செய்த உளுந்து வடை ஒன்றை எடுத்து பழைய பத்திரிக்கைக் காகிதத்தில் பொட்டலம் கட்டி பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

அதை சுருட்டும்போதே, இன்னும் சின்ன பசங்க மாதிரியே சுத்தி பாக்கெட்டில போடுங்க

எனக்கென்ன வயசா ஆயிடுச்சு?

எப்படியாவது கலவையா பேசி சமாளிச்சுடுறீங்க… நாக்கு மட்டும் இல்லைன்னா உங்களை காக்கா தூக்கிட்டு போயிருக்கும்…

கலவையா? சேர்மம் இல்லையா?

கலவை, சேர்மம் என்ன வித்தியாசம் தெரியுமா?

தெரியாமா கேட்டுட்டேன் சாமி… ஆளை விடு

அதெப்படி?

சரி சொல்லு கேட்டுக்கிறேன்…

கலவையின்னா ஈஸியா பிரிக்கலாம்…சேர்மம்ன்னா பிரிக்க முடியாது

புரிஞ்சுடுச்சு…

மிக்ஸர் கலவை! வடை சேர்மம்! அது தானே?

கடவுளே! வடை எடுத்து சாப்பிடுங்க…

மரத்தடியில் நின்று சாப்பிட்டேன்.

கொஞ்சம் ”சால்ட்” அதிகமாயிடுச்சம்மா..

ஆமாம்… கொஞ்சம் ”அசால்டா” இருந்துட்டேன்…

சீக்கிரம் சாப்பிடுங்க…

வடை கூட நிம்மதியா சாப்பிட விட மாட்டியா…

ஏன் மெதுவா சாப்பிடறீங்க…

ஆயில்.. அதிகம்…

ஒ…

நீ சுட்ட வடைக்கு ஆயுளும் அதிகம்… அதனால் தான் மெதுவா சாப்பிடறேன்.

அப்ப மெது வடைன்னு சொல்லுங்க…

சிரித்தேன்…

ஆயில், ஆயுள் வைச்சு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த இறுமாப்பு எனக்கு..

பேப்பரில் ஆயில் கசிந்திருகுவதை உருக்கமாக தூக்கிக் காட்டினேன். அப்போது அதில் நகைச்சுவை எனத் தலைப்பிட்டு ஒரு ஜோக் இருந்தது.

Representational Image

கொரோனா பெருந்தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட ரவிக்கு மூச்சு திணறல் அதிகமாகிக்கொண்டே வந்தது.

கையில் ஆக்சி மீட்டரை வைத்து அவ்வப்போது ஆக்சிஜன் அளவைப் பார்த்துக்கொண்டுருந்த அவனின் மனைவி பதற்றத்தில் இருந்தாள். ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே இருந்தது.

மனைவியை அழைத்தான். இனி நான் பிழைக்கமாட்டேன்

அய்யோ அப்படி சொல்லாதீங்க…

இல்லை…இல்லை… எனது கடைசி ஆசையை சொல்லிடறேன்…

ஆண்டவா… இதென்ன கொடுமை…

கேளும்மா…

அழுதுகொண்டே அவனின் அருகே குனிந்தாள்…

நான் இறந்த பிறகு நீ சுரேஷை மணந்து கொள்ள வேண்டும்…

டார்லிங்… என்னது அவனை உங்களுக்கு சுத்தமாக பிடிக்காதே…

ம்…

அவன் பேரைக்கேட்டாலே… உங்க தலைமுடியெல்லாம் நெத்துகுத்தால நிக்குமே!

ம்… ம்…

டார்லிங்…அவன் உங்களுக்கு ஜென்ம விரோதியாற்றே…

ம்… ம்…ம்

ரவியின் தலை சாய்ந்தது…

படு சீரியஸாக தொடங்கி இப்படி அந்தர்பல்டி நகைச்சுவையாக அமைந்ததை இரண்டாம்முறை படித்து தான் புரிந்து கொண்டேன்.

புரிந்ததும் பயங்கரமாக சிரிப்பு வந்தது.

சரி… சரி சிரிச்சது போதும்…தள்ளி நில்லுங்க

ஏம்மா…

உங்க தலைமேல இலையெல்லாம் விழுது…

அதனாலென்ன… நானே விழுது தான்…

அப்புறம் அது மரமண்டை ஆயிடும்…

எனக்கு சிரிப்பு வந்தது…

சிரித்துக்கொண்டே வடையை சாப்பிடும் போது மிளகாயைக் கடித்து விட்டேன்.

ச்சோ… செம காரம்! உதட்டு புண்ணில் மிளகாய் பட்டி எரிந்தது!

காலையிலையே சொன்னேனே… அது பல்லி யூரின் அடிச்ச காயமுன்னு

விளையாடுறீயா? பல்லி யூரின் போன காயம் வருமா?

வருமுங்க… பல்லி யூரின் அதிகமா போகாது… அதனால் அதனுடைய யூரினில ஆசிட் அதிகமா இருக்கும்! ஆசிட் பட்ட புண் ஆகாதா?

இதைக் கேட்டதும் வடை சாப்பிடும் ஆசையே காணாமல் போனது. நான் பேசும் போது செய்யும் சேட்டைகளை போன வாரம் திருமதி சொன்னதிலிருந்தே கொஞ்சம் அலர்ஜி! அவ்வப்போது நான் பேசும் பொய்களைக் கண்டுபிடிக்கும் டெக்னிக்களை பேச்சுவாக்கில் கேட்பேன். நேரம் வரும்போது சொல்றேன்னு திருமதி சொல்லி ஒரு வாரமாயிற்று. அதனால் நைஸாக இன்று கேட்டுப்பார்ப்போம் எனத்தோன்றியது.

அன்னிக்கு வாய்மேல் கை வைக்கிறது, மூக்கு மேல் விரல் வைக்கிறதெல்லாம் நான் பொய் பேசும் போது செய்யும் என்னுடைய மோனெரிசம்-ன்னு சொன்னியே… வேற டெக்னிக் சொல்லேன்…

நேரம் வரும் போது சொல்றேன்… ஆடு தப்ப விட்டவனுக்குச் செடியெல்லாங் கண்ணு…

எனக்கு பகீரென்றது… ஒரு வேளை போன வாரம் நண்பர்களோடு பார்டிக்கு போனது தெரிஞ்சிருக்குமோ…

Walking

திருமதி அமைதியாக நடப்பது எனக்கு மேலும் திகிலூட்டியது.

மனைவி அமைதியாக இருக்கும்போது எல்லா பொய்களும் வரிசைகட்டி ஞாபகத்திற்கு வருகின்றன… ச்சே!

சொல்லாம எங்காவது பார்டிக்கு போய்ட்டு வந்தா, எங்கிட்ட பேசும் போது கண்ணைத்தேய்ச்சு கண்ணிலிருந்து அழுக்கை எடுக்கிற மாதிரி செய்வீங்களே…

அரிவாளை அப்படி போடு!

மனசுக்குள் ஆயிரம் கவலைகள் தொற்றிக்கொண்டன. இந்த மாதிரி பொதுவாக எல்லோரும் செய்வது வழக்கம் தான். ஆனால், ஒரு விரலில் அழுக்கு எடுப்பது சாத்தியம் இல்லையென்றாலும் அனிச்சையாக பொய் பேசும் போது எனக்கு விரல் கண்ணை நோக்கிப் போவது நிஜம் தான்.


சில சமயம் திக்கி…திக்கி பேசுவீங்க…


அப்படி பார்த்தா…அரிஸ்டாட்டில், மோசஸ், ஈ.கோப்,டார்வின், சர்சில், சாமர் செட்மாம்… எல்லோரும் பொய் பேசுவாங்கன்னு சொல்றியா?


அவங்க ஒன்னும் உங்களை மாதிரி பொய் பேசி மாட்டிட்டுக்கு முழிச்ச மாதிரி கேள்விப்படலையே…


இல்லை…அவங்க எல்லோரும் திக் வாயர்கள் தான்…

ஓ…பரவாயில்லையே அந்தளவுக்கு ஞாபகம் இருக்கா?

நீ பாராட்டியதும் என் வயித்துக்குள்ள வண்ணத்துபூச்சி பறக்குது…


வண்ணத்துப்பூச்சியா? பட்டாம்பூச்சியா?

அவ்வ்… இரண்டு வெவ்வேறா?

வண்ணத்துபூச்சி பகலில் பறக்கும்…

பட்டாம் பூச்சி… நைட்ல பறக்குமா?

ஆமாம்…வண்ணத்துப் பூச்சிகளின் நுனி குமிழுடன் கம்பி போல நீட்டிட்டு இருக்கும்… பட்டாம்பூச்சி பொதுவாக மயிர் அடர்ந்து இருக்கும்,. சீப்பு போல ரோம அமைப்பு இருக்கும்…


வேற….


பட்டுநூல் எடுக்கிறது பட்டாம் பூச்சி தான்…


நானும் ஒரு வித்தியாசத்தைக் கண்டுப்பிடிச்சுட்டேன்…

என்னங்க…


பட்டாம்பூச்சி முழுங்கும்! வண்ணத்துப்பூச்சி என் சம்பளத்தை முழுங்காது! க்கூம்…நீங்க பட்டுசேலை வாங்கி தள்ளிடறீங்க…

போன வாரம் கூட ஒரு சேலை வாங்கலாமுன்னு நினைச்சேன்… எனக்கூறிக்கொண்டே கழுத்தைத் தேய்த்தேன்.

இப்பவும் பொய் தான்…

எப்படி..

பேசும் போது நேருக்குநேர் பார்க்காம கழுத்தை தேய்ச்சா…பேசறது பொய்ன்னு அர்த்தம்…

அட… ஆண்டவா! அப்ப நீயும் தான் ”இவ்வளவு விலையில பட்டுச்சேலை எதுக்கு?”ன்னு கழுத்தைத் தேய்ச்சுட்டே சொல்லுவ… எனக்கு அப்பவெல்லாம் அது பொய்ன்னு தோணலை… எம் மேல கரிசனமுன்னு நினைச்சுட்டு இருந்தேன். இன்னிக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்.என்னுடைய கால்குலேசன் கரெக்டா?

Representational image

க்கூம்.. முட்டை மார்க் தான்!

வெந்த முட்டையா? வேகாத முட்டையா? எரிச்சல் வரும் என நினைத்தேன்.

வெந்த முட்டை காவ்குலேசன்(COAGULATION)! நீங்க வாங்கிற முட்டை கால்குலேசன்!

அவ்வ்… அதென்ன காவ்குலேசன்?


முழுசா முழுங்கும் போது தெரியலையா?


தெரியலையே…


அதுன்னு பெரிய சமாசாரம் இல்லை!


சம்சாரம் சொன்னா சரியா தான் இருக்கும்… சொல்லு

ஆம்லெட் போடும்போது மூட்டை வெள்ளைக்கரு வெந்து வெள்ளை ஆகுதே அது தான்…

அட… அடிபட்டவுடனே ரத்தம் உறைச்சு போகுமே! அதுவும் காவ்குலேசன் தானே?

இன்னிக்கு தான் சரியா சொல்லியிருக்கீங்க..

இனி பேசாம இருக்க வேணுமென எண்ணி அமைதியானேன்.

வாயை திறக்க மாட்டீங்களே!

அமைதியின் சிகரமானேன்!

”வாயைத் திறந்து பதில் சொல்லுங்க!”ன்னு மனைவி சத்தமா கேட்டாலும், அதட்டி கேட்டாலும் ஏமாந்து திறந்துடக்கூடாதுன்னு முடிவு செய்து கொண்டேன். ஏமாந்து திறந்தால்… வாயை மூடாம பதில் சொல்லிட்டே இருக்கணும்!

-டாக்கிங் தொடரும்

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/walking-talking-part-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக