புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு செய்தியாளர்களு அளித்த காணொளி பேட்டியில், “டெலிபோன் ஒட்டுக்கேட்பு சம்பவம் தற்போது இந்தியாவில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இஸ்ரேல் நிறுவனத்தின் செயலி மூலம் பலருடைய செல்போன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனம் சுமார் 50 ஆயிரம் எண்களை வாங்கிக்கொண்டு பல நாடுகளுக்கு உளவு பார்த்திருப்பதாக தகவல்கள் வருகிறது. பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முக்கிய தலைவர்களின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் சி.பி.ஐ இயக்குநர், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவர்களின் உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகள் என பலரது செல்போன்கள் ஒட்டுக் கேட்க பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தனது செல்போன் ஒட்டுக் கேட்பட்டிருப்பதாக ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் சமயத்தில் புகார் கூறியிருந்தார். இது மிகப் பெரிய குற்றமாகும். இஸ்ரேல் நாட்டினர் உளவு பார்ப்பதில் திறமை படைத்தவர்கள். அவர்கள் செல்போன் உரையாடல்களை பதிவு செய்து ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் பெகாசஸ் என்ற ஒரு மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்கள்.
Also Read: புதுச்சேரி: `பதவிக்காகப் பேரம்; நாற்காலிக்காகச் சண்டை!’ - கடுகடுக்கும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி
ஒட்டுக்கேட்பு செயலியை தனியாருக்கு விற்பனை செய்வதில்லை என்றும் அரசாங்கத்துக்கு மட்டுமே கொடுப்போம் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் அதிக விலை கொடுத்து இந்த மென்பொருளை வாங்கி மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக் குழு விசாரிக்க வேண்டும். இந்த மென்பொருளை யார் வாங்கியது, அதற்கான பணத்தை யார் கொடுத்தது, யார் யாரின் போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது என விசாரிக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்தபோது என்னுடைய செல்போனையும் ஒட்டு கேட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறேன். அப்போது எனது செல்போனுக்கு சிக்னல்கள் வந்தது. இது குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-cm-press-meet-regarding-pegasus-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக