10 ஆண்டுகளுக்குப்பிறகு இயக்குநர் செல்வராகவன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைகிறது. 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'மயக்கம் என்ன' படங்களுக்குப் பிறகு சகோதரர்கள் ஒன்றிணையும் நான்காவது படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இன்று காலை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோஸில் போட்டோஷூட் மற்றும் டீஸர் வீடியோ ஷூட்டுடன் படத்துக்கானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கிறது. முதலில் ஷான் ரோல்டன் இசையமைப்பதாக இருந்த இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா தற்போது இசையமைக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரயிருக்கும் 12வது படம் இது. படத்தின் டைட்டிலுக்கு மூன்று சாய்ஸ்கள் பேசப்பட்டுவருகின்றன. இன்னும் டைட்டில் இறுதிசெய்யப்படவில்லை.
முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பர்கள் யார் யார் என்கிற விவரங்கள் விரைவில் வெளியாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரைப் பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம் செல்வராகவன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னைக்கு வெளியே நடைபெற இருக்கிறது. படம் 2021 தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் 'ஜீப்' முக்கிய கேரெக்டராக இருக்கும் எனத்தெரிகிறது. அதனால் இது ஒரு ட்ராவல் கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/dhanush-selvaraghavan-movie-shoot-commenced
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக