Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

கடலூர்: `பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத்துரோகம் செய்கிறார் முதல்வர்’ - ஸ்டாலின் காட்டம்

தி.மு.க தலைவர் மு. க. ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபையில் பங்கேற்று அ.தி.மு.கவை நிராகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து பேசிய அவர், "கிராம சபைக் கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால் தமிழக அ.தி.மு.க ஆட்சியில் கிராம சபை நடத்தப்படவில்லை. எனவே எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க சார்பில் கிராம சபையை நடத்தி வருகின்றோம்.

ஸ்டாலின்

எங்களின் கிராம சபைக்கு வரும் மக்கள்‌கூட்டத்தைப் பார்த்த அ.தி.மு.க அரசு அதிர்ச்சியடைந்து, கிராம சபைக்கு தடை விதித்தனர். எனவே தி.மு.க மக்கள் கிராம சபையாக நடத்தி வருகிறோம். இந்த சபைகளில் அ.தி.மு.க அரசின் கொள்ளைகளை மக்களின் மனதில் பதிய வைத்து வருகிறோம். கைது செய்தாலும் கவலையில்லை என்று தி.மு.க தடையை மீறி கிராம சபையை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.

ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார்கள். தலைவர் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை ‌நிறைவேற்றினார். 2015-ல் ஜெயலலிதா அவர்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீடு கொண்டு வருவதாக கூறினார். அதே போல் எடப்பாடியும் வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார், அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். ஆனால் அவர்கள் கூறிய அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கவில்லை. தமிழக அரசு முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மிகவும் பின்தங்கியேள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்
ஸ்டாலின்
ஸ்டாலின்

நேற்று தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி தனது பேத்திக்கு கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார். செய்தியில் அதனை பார்த்து நான் உருகிப்போகினேன். டெல்லியில் விவசாயிகள் 39 நாட்களாக வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு முதல்வர்களும் தீர்மானம் இயற்றி வருகின்றனர். ஆனால் எடப்பாடி அதனை ஆதரித்து பேசிகிருகிறார். பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத்துரோகம் செய்கிறார் பழனிசாமி. தி.மு.க ஆட்சியில் உங்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும்" என்றார்.

Also Read: கடலூர்: சேற்றில் நெளிந்த மக்கள்! - தி.மு.க-வின் மக்கள் கிராம சபைக் கூட்ட குளறுபடி



source https://www.vikatan.com/government-and-politics/politics/stalin-slams-cm-palanisamy-in-grama-sabha-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக