Ad

புதன், 6 ஜனவரி, 2021

கரூர்: கிணற்றில் கிடந்த மாயமான சிறுவனின் உடல்! - மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் உறவினர்கள்

சிறுவன் ஒருவன் கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம், அந்த சிறுவனின் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தர்ஷன்

Also Read: கரூர்: கூலித் தொழிலாளி கீழே தள்ளிக் கொலை! - தம்பதிக்கு வலைவீச்சு

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் வடக்குத்தெரு, ஏ.வி.பி நகர், 5 வது தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் வளர்ப்பு மகன் தர்ஷன் என்கிற நாட்ராயன் ( வயது 7). இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 4-ம் தேதி திங்கள்கிழமை வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போனதாக தந்தை பாலசுப்பிரமணி, கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பாலசுப்பிரமணியின் புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார், சிறுவனை தேடி வந்தனர். இந்த நிலையில், கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு அருகே உள்ள விவசாய கிணற்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பசுபதிபாளையம் காவல் நிலையம்

சிறுவனின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் தாய் முத்துலட்சுமி, சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸாரிடம் தெரிவித்ததால், அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கரூர் பசுபதிபாளையம் ஏ.வி.பி நகர் வடக்கு தெரு பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சிறுவர்களுக்கு இடையே கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறை, இந்த மரணத்தோடு சம்பந்தப்படுத்தி 5 சிறுவர்களை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/karur-young-boy-body-found-in-well-police-investigating

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக