Ad

சனி, 19 டிசம்பர், 2020

`சாலைப் பாதுகாப்பு சட்டம் ஏன் தேவை?!’ - விளக்கும் தமிழ்ச் சாலை பண்பாட்டு கழகம்

''ஜனநாயக நாட்டில் வாகனங்கள் வாங்க முடியாத ஏழைகள் சாலையில் நடந்து செல்லகூட வழியில்லாமல் தவிக்கிறார்கள். சட்டம் இல்லாததால் நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை.விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறோம். ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 16 ஆயிரம் பேரும் பலியாகிறார்கள்.

சாலை

இந்தியாவில் வன விலங்கு வேட்டையாடுவதை தடுப்பதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால் சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கென்று ஒரு சட்டம் கிடையாது. அதனால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணகான சாலைப் பயணிகள் விபத்துக்குள்ளாகி பலியாகிறார்கள். இதைத் தடுப்பதற்கு சாலைப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்'' என்று தமிழ்ச் சாலைப் பண்பாட்டு கழகம் சார்பாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இதுபற்றி தமிழ்ச் சாலை பண்பாட்டு கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பயா, ''இந்தியாவில் மோட்டார் வாகன சட்டம் மட்டுமே இருக்கிறது. சாலைப் பாதுகாப்புக்கென்று தனிச் சட்டம் இல்லை. அதனால் சாலையில் நடைப் பயணிகளுக்கென்று இடம் ஒதுக்கப்படுவதில்லை. சாலையின் ஓரத்தில் கடைகள் கட்டப்படுகிறது. வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகிறது. கழிவு நீர் வாய்க்கால்கள் அமைக்கப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் வாகனங்கள் வாங்க முடியாத ஏழைகள் சாலையில் நடந்து செல்ல வழியில்லாமல் தவிக்கிறார்கள். சட்டம் இல்லாததால் நியாயம் கேட்டு நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை.விபத்துகள் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறோம். ஆண்டுதோறும் இந்தியாவில் சாலை விபத்துகளில் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 16 ஆயிரம் பேரும் பலியாகிறார்கள். தமிழ்நாட்டில் நடைபயணிகள் மட்டும் 3 ஆயிரம் பேர் மரணிக்கிறார்கள். 1.5 லட்சம் பேருக்கு கை, கால்கள் முறிந்து படுகாயம் ஏற்படுகிறது.

தம்பையா

சாலை விபத்துகள் தேசிய பேரிடராக உருவெடுத்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் சாலை பயணிக்கள் புகார் கொடுப்பதற்கு உரிய அலுவலகமோ, அதற்குரிய முகமையோ கிடையாது. அதனால் சாலைப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவதோடு சாலைப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஏற்படுத்தி சாலைப் பாதுகாப்பு வீரர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள முக்கிய சாலைகளில் நடைப் பயணிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைப்பாதை அமைப்பார்கள். சாலை ஓரத்தில் உள்ள அக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நகரமையமாதல் பரவலாக்கப்படும். விபத்துகள் தடுக்கப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்படும்'' என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/news/ensure-the-safety-of-public-in-road

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக