திருப்பத்தூர் நகர தி.மு.க சார்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்துகொண்டார். அதில் அவர் பேசுகையில், ``தி.மு.க-காரனின் வீரம் பட்டுப்போய்விடவில்லை. அந்த விவேகம் மங்கிவிடவில்லை.
மாற்றானுக்கு மண்டியிடுகிற கோழைத்தனம் தி.மு.க-காரனுக்கு இல்லை. அப்படி மண்டியிடுகிறவன் தி.மு.க-காரனாகவே இருக்க முடியாது. அவன் பிறப்பையே நான் சந்தேகப்படுவேன். அவன் தி.மு.க-வைச் சேர்ந்தவனில்லை.
Also Read: `எங்கய்யா உங்க ஊர் ஸ்பெஷல்?!' - ஜிலேபி பாசத்தால் பாதிக்கப்பட்ட துரைமுருகன்?
கலைஞர் சொன்னார்,`தன்னால் கட்சிக்கு என்னால் லாபம் என்று கருதுகிறவன் கட்சியின் ரத்த நாளம் போன்றவன். கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் கட்சியில் வளர்கிற புற்றுநோய்க்கு சமமானவன்’.
அதைப்போல... `கட்சி எனக்கென்னப்பா பன்னிச்சு’னு கேட்டாலே... அவனுக்கு புற்றுநோய் ஆரம்பமாகிடுச்சுனு அர்த்தம். `நான் கட்சிக்காகச் செய்கிறேன்’னு சொல்பவனால் மட்டுமே ரத்த நாளம்போன்று தி.மு.க கொடிகட்டிப் பறக்கும்’’ என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-general-secretary-duraimurugan-controversial-speech
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக