எந்த பிசினஸாக இருந்தாலும் வாடிக்கையாளர்களை ஈர்த்து பிசினஸில் ஜெயிக்க உதவியாக இருப்பது மார்க்கெட்டிங். ஒரு பொருளை எப்படியெல்லாம் விற்பனை செய்ய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தொழிலதிபருக்கும் ஒரு திட்டம் இருக்கும்.
ஒரு பொருளை அறிமுகம் செய்வதிலிருந்து அதை விற்பனை செய்து, தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வது வரை தொழிலை வெற்றிகரமாக நடத்த நிறைய மார்க்கெட்டிங் உத்திகளைக் கடைப்பிடித்தால்தான் அந்த பிசினஸில் வெற்றி பெற முடியும்.
புதிதாகத் தொழில் தொடங்கியவர்கள், மார்க்கெட்டிங்குக்கு நிறைய பணத்தைச் செலவழிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். அந்த நிலையில், அந்தச் செலவை வீண் என்றுகூட நினைப்பார்கள். ஆனால், மார்க்கெட்டிங்குக்காக நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு வகையான முதலீடே என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதிகம் செலவு செய்யாமல், அதே நேரத்தில் அதிக அளவிலான மக்களைச் சென்றடைய ஏதாவது ஒரு வழி இருக்கிறதா என்பது சிறிய அளவில் தொழில் செய்பவர்களின் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில்தான், கொரில்லா மார்க்கெட்டிங்.
கொரில்லா குரங்கு தெரியும். அது என்ன கொரில்லா மார்க்கெட்டிங், இதை பிசினஸில் எப்படிப் புகுத்தலாம் என்பது பற்றி விவரிக்கிறார் மார்க்கெட்டிங் ஆலோசகர் சக்திவேல் பன்னீர்செல்வம்.
``ஒரு நிறுவனத்துக்கான மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் என்றவுடன் அச்சு, தொலைக்காட்சி, வானொலி, ஸ்டால்கள் வைப்பது, டிஜிட்டல் விளம்பர ஐடியாக்கள்தான் நம் எண்ணத்தில் வந்து போகும். இத்தகைய விளம்பரங்களுக்காக மணிக்கணக்கில் யோசித்து, ஆயிரக்கணக்கில் செலவழித்திருப்போம். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்துவிட்டு, அடுத்த கட்ட விளம்பர உத்தியாக பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள் எனச் சிந்திக்கக்கூடும்.
வழக்கமான முறைகளைப் பின்பற்றாமல் வித்தியாசமான நடவடிக்கைகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதைத்தான் கொரில்லா மார்க்கெட்டிங் டெக்னிக் என்கிறார்கள் மார்க்கெட்டிங்துறை சார்ந்த நிபுணர்கள். வித்தியாசமான சிந்தனை மூலம் காலத்துக்கு ஏற்ப, குறைந்த செலவில் அதிகமான மக்களைச் சென்றடைவதுதான் இந்த கொரில்லா மார்க்கெட்டிங்கின் நோக்கம்.
கிரியேட்டிவாக யோசிப்பதற்கும் லேட்டரல் திங்கிங்குக்கும் நிறைய மாறுபாடுகள் உண்டு. கொரில்லா மார்க்கெட்டிங் முறை என்பது லேட்டர் திங்கிங் உத்தியைக் கொண்டதாகும். உதாரணமாக, காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்றால், பெரும்பாலான நிறுவனங்கள் `ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', ஒரே மாதிரியான இரு பொருள்களை வாடிக்கையாளருக்கு ஏற்றபடி `கஸ்டமைஸ்ட்'ஆக செய்து தருவது என நிறைய அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இதன் மூலம் அவர்களின் லாபத்தின் அளவைக் குறைத்து விற்பனையை அதிகரிப்பார்கள்.
ஆனால், சென்னையில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, கடந்த காதலர் தினத்தன்று `சிங்கிள்களுக்காக சிக்கன் பொக்கே' என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, கொரில்லா டெக்னிக் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இந்தச் சலுகை புதுமையாக இருந்ததுடன் லாபத்தின் அளவையும் குறைக்காமல், அதிகமான நபர்களையும் அந்த உணவகம் சென்றடைந்தது.
- கொரில்லா மார்க்கெட்டிங் குறித்து விரிவாக அறிவதுடன், இந்த முறையில் வெற்றி பெற பின்பற்ற வேண்டிய 5 வழிமுறைகள் குறித்தும் நாணயம் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > சிறு நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் கொரில்லா மார்க்கெட்டிங்! - வழிகாட்டும் ஆலோசனைகள்! https://bit.ly/34rLEBx
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV
source https://www.vikatan.com/business/finance/an-introduction-about-guerrilla-marketing
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக