Ad

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

10,000 ரூபாய்க்கு ஒன் ப்ளஸ் போன்... என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?!

இந்த 'நியூ நார்மல்' வாழ்க்கையில் முடிந்தளவு செலவுகளைக் குறைப்பதே மக்களின் மனநிலையாக இருக்கிறது. மக்களின் இந்த மனநிலைக்கு ஏற்றவாறு தங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன நிறுவனங்கள். குறிப்பாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஓரிரு ஆண்டுகளாகவே ப்ரீமியம் செக்மென்ட்டிலிருந்து மிட்ரேஞ்ச், பட்ஜெட் செக்மென்ட் பக்கம் கவனத்தைத் திருப்பிவருகின்றன.

அதன் ஒரு பகுதியாகத்தான் ப்ரீமியம் போன்களில் இருக்கும் ஒரு சில வசதிகளை மட்டும் குறைத்து மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன நிறுவனங்கள். இதன் விளைவாகவே ஐபோன் SE, ஒன்ப்ளஸ் நார்டு போன்ற போன்கள் வெளிவந்தன.
OnePlus 7T

இந்தியாவை பொறுத்தவரையில் ப்ரீமியம், மிட்ரேஞ்ச் செக்மென்ட்டைவிட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பது பட்ஜெட் செக்மென்ட்தான். ப்ரீமியம் செக்மென்ட்டில் இந்தியர்கள் பலரையும் கவர்ந்த ஒன்ப்ளஸ் பட்ஜெட் ஏரியாவையும் விட்டுவைக்க விரும்பவில்லை. ஆம், பட்ஜெட் போன் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்போகிறது ஒன்ப்ளஸ். ஏற்கனவே 13,000 ரூபாய் விலையில் பட்ஜெட் டிவி ஒன்றை சமீபத்தில்தான் அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இப்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டிலும் முதல்முறையாகக் களமிறங்கப்போகிறது ஒன்ப்ளஸ் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. வடிவமைப்பு கட்டத்தில் இருக்கும் இந்த போனை தற்போதைக்கு 'க்ளோவர்' என அழைக்கிறதாம் ஒன்ப்ளஸ்.

க்ளோவரில் என்ன ஸ்பெஷல்?

இப்படி ஒரு போன் ரெடியாகிறது என ஒரு வாரமாகவே தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இது பட்ஜெட் சிப்செட்டான குவால்கம் ஸ்னாப்டிராகன் 460 புராசஸருடன் வரும் எனத் தெரிகிறது. இது என்ட்ரி லெவல் சிப். அதனால் பர்ஃபாமென்ஸ் ஓகேவாகதான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஹை-கிராபிக்ஸ் கேமிங்கிற்கு செட் ஆகாது. இது 5G சிப் இல்லை என்பதால் அந்த சப்போர்ட்டும் இருக்காது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ டிஸ்ப்ளே

பட்ஜெட் போன் என்பதால் க்ளோவரில் AMOLED டிஸ்ப்ளே எல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவராக இருக்கும். வெளிவந்திருக்கும் தகவல்களின்படி 6.52 இன்ச் HD+ IPS LCD கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. டிஸ்ப்ளே தரம் எப்படி இருக்கிறது என்பது வெளிவந்தால்தான் தெரியும். 4GB RAM + 64 GB ஸ்டோரேஜ் என்ற ஒரே ஒரு வேரியன்ட்டில்தான் க்ளோவர் வெளிவருமாம். ஆனால், அதிக ஸ்டோரேஜூக்கு microSD கார்டு போட்டுக்கொள்ள முடியும். ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்களில் இந்த வசதி கிடையாது.

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார்

சமீபத்தில் வெளிவந்த அனைத்து ஒன்ப்ளஸ் போன்களிலுமே இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டிருந்தது. க்ளோவரில் அது இடம்பெறாது. அதற்குப் பதிலாகப் பின்பக்கம் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

கேமராவை பொறுத்தவரையில் பின்புறம் ட்ரிபிள் கேமரா செட்-அப் இருக்கும். ஆனால், ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்களிலிருக்கும் கேமரா சென்சார்கள் க்ளோவரில் இடம்பெறாது. 13 MP மெயின் கேமராவும், இரண்டு 2 MP கேமராக்களும் (மேக்ரோ & டெப்த்) கொடுக்கப்படலாம் என்பதே இப்போதைய தகவல்.

OnePlus Charger

பட்ஜெட் போன் என்பதால் மக்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என ஹெட்போன் ஜாக் க்ளோவரில் கொடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம். அப்படியானால் ஒன்ப்ளஸ் 6-க்கு பிறகு ஹெட்போன் ஜாக் இருக்கும் ஒன்ப்ளஸ் போன் இதுவாகத்தான் இருக்கும்.

இதன் சர்வதேச விலை ஏறத்தாழ $200 வரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்ப்ளஸ் நார்டு, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் மட்டும்தான் வெளியானது. அது போல் இல்லாமல் அமெரிக்கா உட்பட அனைத்து முக்கிய ஸ்மார்ட்போன் சந்தைகளிலும் வெளிவருமாம் 'க்ளோவர்'. இந்தியாவில் பொதுவாகவே சர்வதேச விலையை விடக் குறைவான விலையையே ஒன்ப்ளஸ் நிர்ணயிக்கும். அதன்படி இது சுமார் 10,000 ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த விலையில் ஷாவ்மி, ரியல்மீ போன்று ஏற்கெனவே இந்த ஏரியாவில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களுடன் போட்டிப்போடும் ஒன்ப்ளஸ். தற்போது தெரியவந்திருக்கும் ஸ்பெக்ஸ் வைத்துப் பார்க்கையில் ஷாவ்மி, ரியல்மீ போன்களை விட வசதிகளில் பின்தங்கியே இருக்கிறது 'க்ளோவர்'. ஆனால், இந்தியாவில் ஒன்ப்ளஸுக்கு இருக்கும் பிராண்ட் இமேஜூம், ஸ்மூத்தான மென்பொருள் அனுபவமும் இந்த பட்ஜெட் ஏரியாவில் ஒன்ப்ளஸுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

இன்னும் இந்த போன் குறித்து ஒன்ப்ளஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அடுத்துவரும் ஒன்ப்ளஸ் 8T-யுடன் இதுவும் அறிமுகப்படுத்தப்படலாம். காத்திருப்போம்!

பட்ஜெட் விலையில் ஒன்ப்ளஸ் போன் வந்தால் வாங்குவீர்களா... உங்கள் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடுங்கள்!


source https://www.vikatan.com/technology/gadgets/10000-rupee-oneplus-what-we-know-about-clover-so-far

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக