2021 புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதேபோல எதிரணியில் தி.மு.கவும் காங்கிரஸும் கைகோர்த்துக் களம் கண்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் இந்தத் தேர்தலில் சுயேட்சைகள் உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் துறை அறிவுறுத்தியது. அதையடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மட்டுமின்றி களத்தில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவினங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். அதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில் மாஹே வேட்பாளரான ஜானகி மற்றும் மண்ணாடிப்பட்டு வேட்பாளரான தனவேலு ஆகியோரை தவிர மற்றவர்களின் தேர்தல் செலவின பட்டியலை ஏற்றுக்கொண்ட மாநில தேர்தல் துறை, அவற்றை தனது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டு தோல்வியடைந்த ஏனாம் தொகுதியில் ரூ.19,19,354 லட்சம் செலவு செய்திருக்கிறார். அதேசமயம் அவர் வெற்றிபெற்ற தொகுதியான தட்டாஞ்சாவடியில் வெறும் ரூ.6,50,742 லட்சம் மட்டுமே செலவு செய்திருக்கிறார். ஏனாம் தொகுதியில் முதல்வர் ரங்கசாமியை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளரான ஸ்ரீநிவாஸ் அசோக் ரூ.13,80,615 லட்சம் செலவிட்டிருக்கிறார். அதேபோல குறைந்தபட்சமாக ரெட்டியார்பாளையம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசங்கரன் ரூ.2,17,632 லட்சமும், முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர் பிரகாஷ்குமார் ரூ. 2,46,716 லட்சமும் செலவு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொகுதி வாரியாக வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களின் செலவு விபரம்:
1. மண்ணாடிப்பட்டு -நமச்சிவாயம் ரூ.6,16,293 லட்சம்.
2. திருபுவனை (தனி) -அங்காளன் ரூ.4,25,138 லட்சம்
3. ஊசுடு (தனி) -சாய்.ஜெ.சரவணன்குமார் ரூ.6,78,96 லட்சம்
4.மங்கலம் -தேனீ ஜெயக்குமார் ரூ.5,08,126 லட்சம்
5.வில்லியனூர் -சிவா ரூ.9,09,916 லட்சம்
6.உழவர்கரை -சிவசங்கரன் ரூ.2,17,632 லட்சம்
7.கதிர்காமம் -கேஎஸ்பி ரமேஷ் ரூ.3,82,491 லட்சம்
8.தட்டாஞ்சாவடி -ரங்கசாமி ரூ.6,50,742 லட்சம்
9.இந்திராநகர் -ஏ.கே.டி.ஆறுமுகம் ரூ.3,82,656 லட்சம்
10.காமராஜர்நகர் -ஜான்குமார் ரூ.8,91,899 லட்சம்
11.லாஸ்பேட்டை -வைத்தியநாதன் ரூ.6,08,151 லட்சம்
12.காலாப்பட்டு -கல்யாணசுந்தரம் ரூ.14,49,833 லட்சம்
13.முத்தியால்பேட்டை -பிரகாஷ்குமார் ரூ.2,46,716 லட்சம்
14. ராஜ்பவன் -லட்சுமிநாராயணன் ரூ.6,45,598 லட்சம்
15.உப்பளம் -அனிபால்கென்னடி ரூ.2,58,182 லட்சம்
Also Read: புதுச்சேரி: `வேட்பாளர்கள் செலவுத் தொகை எவ்வளவு?!’-சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர்
16.உருளையன்பேட்டை -நேரு ரூ.8,36,084 லட்சம்
17.நெல்லித்தோப்பு -ரிச்சர்ட் ஜான்குமார் ரூ.5,70,270 லட்சம்
18.முதலியார்பேட்டை -சம்பத் ரூ.6,53,792 லட்சம்
19.அரியாங்குப்பம் -பாஸ்கர் ரூ.5,42,704 லட்சம்
20.மணவெளி -செல்வம் ரூ.12,94,117 லட்சம்
21.ஏம்பலம் (தனி) -லட்சுமிகாந்தன் ரூ.3,67,860 லட்சம்
22.நெட்டப்பாக்கம் -ராஜவேலு ரூ.4,46,881 லட்சம்
23.பாகூர் -செந்தில்குமார் ரூ.6,14,564 லட்சம்
24.நெடுங்காடு (தனி) -சந்திரபிரியங்கா ரூ.7,27,520 லட்சம்
25.திருநள்ளாறு -பி.ஆர்.சிவா ரூ.8,62,204 லட்சம்
26.காரைக்கால் வடக்கு -திருமுருகன் ரூ.15,47,783 லட்சம்
27.காரைக்கால் தெற்கு -நாஜிம் ரூ.8,33,298 லட்சம்
28.நிரவி -நாக. தியாகராஜன் ரூ.9,28,892 லட்சம்
29.மாகே -ரமேஷ் பரம்பத் ரூ.12,97,585 லட்சம்
30. ஏனாம் -ஸ்ரீநிவாஸ் அசோக் ரூ.13,80,615 லட்சம்
source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-election-expense-list-was-released
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக