Ad

வியாழன், 21 ஜனவரி, 2021

காய்ச்சலில் அபி... காப்பாற்றும் கௌதம்... சித்தார்த்தின் கொடுமைகள் முடியுமா? #VallamaiTharayo

என்னதான் பிரச்னையாக இருந்தாலும் மனைவியை வெளியில் நிற்க வைப்பவன் எல்லாம் ஒரு மனிதனா? அப்படியொரு மனிதத்தன்மையற்ற செயலைச் செய்துவிட்டு, நிம்மதியாகத் தூங்குகிறான் சித்தார்த். போனும் அணைக்கப்பட்டிருப்பதால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஹர்ஷிதாவிடம் உதவி கேட்டால், சித்தார்த் என்ன சொல்வானோ என்கிற பயத்தில், தோட்டத்தில் உள்ள பெஞ்சில் படுத்து உறங்குகிறாள். பனியிலும் காற்றிலும் அவளுக்கு ஜுரம் வந்துவிட்டது.

விடிந்ததும் அபி தூங்குவதைப் பார்த்து பதறிப்போய் ஓடி வருகிறார் வாட்ச்மேன். அபி கண்விழிக்கவில்லை. வீட்டுக்குச் சென்று சித்தார்த்தை அழைத்து வருகிறான்.

Vallamai Tharayo

``நான் தூங்கிட்டேன்னு தொந்தரவு கொடுக்க வேணாம்னு நினைச்சு இங்கே படுத்திருப்பாங்க. நீங்க ரொம்பப் பதறாதீங்க. இவ என் வொயிஃப். எனக்குப் பார்த்துக்கத் தெரியும்” என்கிறான் சித்தார்த்.

வாட்ச்மேன் இவ்வளவு மோசமான மனிதனை இதுவரை பார்த்ததில்லை என்று நினைக்கிறார். ஹர்ஷிதாவிடம் நடந்த விஷயங்களைச் சொல்கிறார். அவள் பதறிக்கொண்டு அபி வீட்டுக்கு வருகிறாள்.

``கொஞ்சம் லேட்டா வந்ததால் வெளியிலேயே தூங்கிட்டா. இது ஒரு விஷயமா? என் வொயிஃபைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நீங்க போகலாம்” என்று முகத்தில் அறைந்த மாதிரி பேசுகிறான் சித்தார்த்.

காய்ச்சல் என்று தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் சித்தார்த்தைக் கண்டு எரிச்சலடையும் ஹர்ஷிதா, கெளதமுக்குத் தகவல் சொல்கிறாள்.

``நேத்து ராத்திரி ஆபீஸிலிருந்து கொஞ்சம் லேட் ஆனதுக்கு இவ்வளவு பண்றாரா? நான் உடனே வரேன். ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகலாம்” என்கிறான் கெளதம்.

வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிக்கிறார்கள். யாரும் திறக்கவில்லை. கதவைத் தொட்டவுடன் திறந்துவிடுகிறது. சித்தார்த் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததால் கதவை அடைக்கவில்லை.

Vallamai Tharayo

அபியை எழுப்புகிறார்கள். சித்தார்த் வந்த பிறகு, போகலாம் என்று எவ்வளவோ சொல்கிறாள். ஆனால், அவளை எழுப்பி அழைத்துச் செல்கிறார்கள்.

வாட்ச்மேனும் அபார்ட்மென்ட் செகரட்டரியும் பேசிக்கொண்டிருக்கும்போது சித்தார்த் வருகிறான். ``என்ன ஆச்சு அபிக்கு? நடுங்கிட்டிருந்தாங்க. அவங்களை அடிக்கடி டிராப் பண்ணும் பையனும் ஹர்ஷிதாவும் ஹாஸ்பிடல் அழைச்சிட்டுப் போயிருக்காங்க” என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார் செகரட்டரி.

``ஒண்ணும் இல்லை. லேசான ஜுரம்தான்...”

``நீங்க வீட்ல இருக்கும்போது யாரோ வந்து அழைச்சிட்டுப் போறாங்கன்னா அது சாதாரணமான விஷயமில்லை.”

``நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு, சித்தார்த் செல்கிறான்.

இப்படிப் பற்ற வைத்துவிட்டாரே என்று வாட்ச்மேன் வருத்தப்படுகிறார்.

இனி என்ன நடக்குமோ?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-review-for-episode-64

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக