மனித நேய மக்கள் கட்சியின் தென்கிழக்கு மண்டலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரையில் நடந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் ம.ம.க-வின் நிலைப்பாடு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ``அனத்து தரப்பு மக்களின் நலனுக்கு எதிராகவே மத்திய, மாநில அரசுகள் திட்டங்களைக் கொண்டு வருகின்றன.
Also Read: சசிகலா: `நுரையீரல் தொற்று; கடும் நிமோனியா காய்ச்சல்!’ - மருத்துவ அறிக்கை
மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளே அதற்கு உதாராணம். மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி மாசி வீதிகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத வகையில் குண்டும் குழியுமாக உள்ளது.
இத்திட்டத்தின் செயல்பாடு பற்றி தொகுதி எம்.பி-யும் திட்ட ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவருமான சு.வெங்கடேசனிடம்கூட தகவல் தெரிவிப்பதில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் 14 இடங்களில் நடந்துவரும் வேலைகள் அரைகுறையாக உள்ளன.
வருகிற 27-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். இந்த நிலையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அவர் வெளியே வருவது தமிழகத்தில் அ.தி.மு.க,பா.ஜ.க-வுக்கு பாதிப்பை உண்டாக்கும். வெளி மாநில முஸ்லீம் அமைப்புகளின் தலைவர்கள் திடீரென்று தமிழகத்தில் அரசியல் செய்ய வந்தால், இங்குள்ள முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும்" என்றார்.
source https://www.vikatan.com/news/politics/jawahirullah-raises-question-over-sasikalas-hospital-admission
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக