Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

புதிய நாடாளுமன்ற கட்டட பணிக்கு எதிரான வழக்கு! - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம் #NowAtVikatan

புதிய நாடாளுமன்ற கட்டடம் - இன்று தீர்ப்பு!

மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடமும் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியினை மேற்கொண்டது. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறவில்லை என்றும் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை கட்டுமான பணிகளையோ, கட்டடம் இடிக்கும் மற்ற பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது. ஆனால் ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம், என உச்ச நீதிமறம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

தமிழகத்தில் மழை!

சென்னை மழை - மெரினா கடற்கரை - மாதிரிப் படம்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு முதலே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இன்னும் 2 மணி நேரத்துக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்டப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது!



source https://www.vikatan.com/news/general-news/05-01-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக