90-களின் இறுதியில் கோலிவுட்டில் ஆட்சிசெய்த ஹீரோயின்களில் சிம்ரன் முக்கியமானவர். விஜய், அஜித், சூர்யா, கமல் என இவர் ஜோடி சேராத ஹீரோவே இல்லை. ரசிகர்களிடம் வரவேற்பு குறையாதபோதிலும், திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்ரன், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தார். `பேட்ட' படத்துக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறார். ஓடிடியில் வெளியான `பாவக் கதைகள்' ஆந்தாலஜியில் கௌதம் மேனன் இயக்கத்தில், `வான்மகள்' கதையில் இரண்டு குழந்தைகளின் அம்மாவாக நடித்திருக்கிறார். பாலிவுட்டில் வெளியான `அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.
கோலிவுட்டுக்கு இன்னோர் அம்மா கிடைச்சிட்டாங்கன்னு வெச்சுக்கலாமா என்ற கேள்வியோடு சிம்ரனிடம் பேசினோம்.
`` `கன்னத்தில் முத்தமிட்டால்', `வாரணம் ஆயிரம்'னு பல வருஷங்களுக்கு முன்னாடியே நான் அம்மா கேரக்டர்ல நடிச்சிட்டேன். அம்மா கேரக்டர்ல நடிக்கக் கேட்டாலும் எனக்கு அது பிடிச்சா மட்டும்தான் ஓகே சொல்வேன். அதுக்காக விஜய்க்கு அம்மாவா நடிப்பீங்களானு கேட்டா, அது நிச்சயம் நடக்கப்போறதில்லை. மக்களும் அதை ஏத்துக்க மாட்டாங்க...'' - சிம்பிளாகச் சொல்கிறார் சிம்ரன்.
``ரீமேக் படங்கள் ட்ரெண்டாகும் காலமிது. நீங்க நடிச்ச படங்கள்ல எது ரீமேக் செய்யப்படலாம்னு நினைக்கறீங்க, அந்த ரீமேக்ல உங்க கேரக்டருக்கு இப்ப உள்ள நடிகைகள்ல யார் உங்க சாய்ஸ்?"
`ப்ரியமானவளே', `துள்ளாத மனமும் துள்ளும்' இந்த ரெண்டும் என் ஃபேவரைட்ஸ். இந்த ரெண்டுலயம் என் கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ்தான் என் சாய்ஸ்.''
``அந்தாதுன் ரீமேக்கில் பல நடிகைகளும் நோ சொன்ன கேரக்டருக்கு நீங்க ஓகே சொல்ல என்ன காரணம்?"
``நிஜத்துல ரெண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவான உங்களுக்கு பெண் குழந்தை இல்லாத ஏக்கம் உண்டா?"
``கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளுக்கு ஹீரோயின் வாய்ப்பு பறிபோவது பற்றி என்ன நினைக்கிறீங்க?"
இப்படி இன்னும் பல கேள்விகளுடன் சிம்ரனின் மனம் திறந்த பேட்டி நாளை வெளிவரவிருக்கும் அவள் விகடன் இதழில்... மிஸ் பண்ணிடாதீங்க!
source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-simran-speaks-about-acting-in-on-screen-mother-roles
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக