மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர். புகை மண்டலம் அதிகமாக இருந்ததால், மீட்புப் பணியை விரைந்து மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டன. 10 குழந்தைகள் தீ விபத்தினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் தீயில் கருகி உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிகாலை 2 மணி என்பதால் சிலர் தூக்கத்தில் இருந்தனர். இதனால் தீ விபத்தை உடனே கவனிக்கவில்லை. உடனே கவனித்து இருந்தால் அதிகப்படியான குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியும் என்கிறார்கள். இதுகுறித்து பண்டாரா மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் கதம் கூறுகையில், ``அதிகாலை 1.30 மணிக்குப் பிறந்து சில மாதங்களேயாகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த குழந்தைகள் பிரிவில் தீ பிடித்தது. பணியில் இருந்த செவிலியர்கள் இரண்டு பேர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 7 குழந்தைகளை மீட்டனர் . தீ விபத்து நடந்த பகுதியில் இருந்து தொடர்ச்சியாக சிலிண்டர் மற்றும் உபகரணங்கள் வெடித்துக் கொண்டிருந்ததால் ஊழியர்களால் அனைவரையும் காப்பாற்ற முடியவில்லை'' என்று தெரிவித்தார்.மகாராஅ
Also Read: கன்னியாகுமரி கடற்கரையில் பயங்கர தீ விபத்து - 69 கடைகள் எரிந்து நாசம்!
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதல்வர் உத்தவ் தாக்கரே இது குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயுடன் பேசினார். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் ராஜேஷ்தோபே உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். காலை 5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்ட மருத்துவமனையை பார்வையிட்டார். அதோடு இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி மிகவும் அதிர்ச்சி தெரிவித்துள்ளதோடு இது நெஞ்சை பிளக்கும் சம்பவமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இது தவிர உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/accident/early-morning-fire-at-maharashtra-government-hospital-10-children-killed
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக