திருமஞ்சனம் என்பதற்கு மகா அபிஷேகம் என்பது பொருள். நம்முடைய ஒரு வருடம் என்பது, தேவர்களுக்கு ஒரு நாள். அதேபோல் தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதமாகவும், காலைப் பொழுது மாசி மாதமாகவும், உச்சிக்காலம் சித்திரை மாதமாகவும், மாலைப்பொழுது ஆனி மாதமாகவும், இரவு பொழுது ஆவணி மாதமாகவும், அர்த்த சாமம் புரட்டாசி மாதமாகவும் விளங்கின்றன.
சிவபெருமானுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், ஆடலரசன் நடராஜ பெருமானுக்கே ஆண்டில் ஆறே அபிஷேகங்கள். அவற்றுள் மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும் சிதம்பரத்தில் பிரம்மோற்சவமாகவே கொண்டாடப்படுகின்றன.
நடராஜ பெருமானுக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம் என 36 வகையான பொருட்களைக்கொண்டு ஆறு அபிஷேகங்களும் நடைபெறும். ஆனித் திருமஞ்சன விழாவைச் சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி என்பார்கள்.
நடராஜரையும், அன்னை சிவகாமியையும் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து திருமஞ்சன அபிஷேகங்கள் நடைபெறும். அதன்பின் இருவரும் ஆனந்த நடனம் புரியும் அற்புத காட்சி அரங்கேறும். ஆனந்த நடனம் புரிந்தவாறு ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வார்கள். தீபாராதனை முடிந்ததும், இரவு அபிஷேகம் முடிந்து கொடியிறக்கப்படும்.
இந்த ஆனித் திருமஞ்சனத்தைக் காண்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள் ஏராளம் என்கிறார்கள் பக்தர்கள். அவற்றில் மிக முக்கியமான பலன் குறித்து அறிந்துகொள்ள ஆனித் திருமஞ்சனத்துக்கு ஜோதிட சாஸ்திரம் தரும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
source https://www.vikatan.com/spiritual/gods/aani-thirumanjanam-is-very-special
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக