தொலைத்த வீட்டு சாவியைக்கூட கூகுளில் தேடும் காலத்துக்குள் இருக்கிறோம். கூகுளில் ஒரே நேரத்தில் அதிகமானோரால் தேடப்படும் விஷயம் டிரெண்ட் ஆவது வழக்கம். கோடைக்காலத்தில் மாம்பழ ரெசிபிக்கள் அதிகம் தேடப்பட்ட வரலாறு எல்லாம் இந்தியாவில் உண்டு. ஆனால் கோவிட் காலத்தில் அது தொடர்பான தேடல் ஒன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது.
கோவிட்-19 பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் 'கோவிட்-19 தடுப்பூசி எப்போது வரும்?' என்பதைத்தான் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கூகுளியிருக்கின்றனர். பொதுவாகவே 'டூ இட் யுவர்செல்ஃப்' -DIY) வகை வீடியோக்கள் அதிக டிரெண்ட் ஆவதுண்டு.
அந்த வரிசையில் கோவிட் தடுப்பு மருந்தும் இடம்பிடித்தது. 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் உலகம் முழுவதும் அதிகமாகத் தேடப்பட்ட இரண்டாவது தலைப்பு 'வீட்டிலேயே கோவிட் தடுப்பு மருந்து தயாரிப்பது எப்படி?' என்பதுதான்.
ஜூலை மாதம் நடைபெற்ற விஷயத்தை ஏன் இப்போது சொல்லவேண்டும் என்ற கேள்வி எழுகிறதா?
காரணம், மீண்டும் அதே தலைப்பு கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் அல்ல இந்தியாவில். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டமாக இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.
அதற்கு அடுத்தநாள், அதாவது ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் இந்தியாவில் அதிகமானோர் 'வீட்டில் கோவிட் தடுப்பூசி தயாரிப்பது எப்படி?' என்பதைத்தான் தேடியிருக்கின்றனர். அதிகமானோர் தேடியிருக்கின்றனர் என்றால் அப்போது தடுப்பூசியைத் தயாரிக்க முடியுமா என்றால் நிச்சயம் அதற்கு பதில் இல்லை மற்றும் கூடாது என்பதுதான்.
தடுப்பூசி தயாரிப்பது என்பது பலகட்ட விலங்கு, மனித பரிசோதனைகளைத் தாண்டி உருவாவது. அதைச் சாதாரண அறிவியல் ஆய்வகங்களில்கூடத் தயாரிக்க முடியாது. பல்வேறு பாதுகாப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் அதிநவீன ஆய்வகத்தில்தான் தயாரிக்க முடியும்.
அப்போது ஏன் கூகுளில் அதிகமானோர் தேடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தால் நீங்களும் 'என் இனமடா!'
Also Read: COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மரணம்; ஆனால் காரணம் அனபிலாக்ஸிஸ் அல்ல... மருத்துவ விளக்கம்!
source https://www.vikatan.com/news/trending/how-to-make-covid-vaccine-at-home-tops-in-google-search
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக