Ad

திங்கள், 4 ஜனவரி, 2021

ஆந்திரா: டி.எஸ்.பி-யான மகளுக்கு சல்யூட்! - `இன்ஸ்பெக்டர்’ தந்தை நெகிழ்ச்சி

ஆந்திராவின் சந்திரகிரி கல்யாணி அணை போலீஸ் பயிற்சி மையத்தில் பணிபுரிபவர் ஒய்.ஷ்யாம் சுந்தர். இன்ஸ்பெக்டரான இவருக்கு இரண்டு மகள்கள். அவர்களில், மூத்த மகளான ஜெஸ்ஸி பிரசாந்தி, குண்டூர் மாவட்ட டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிவருகிறார்.

Also Read: சென்னை: மனைவியின் சிகிச்சைக்கு சேமித்த பணம் - காவலாளியின் ரூ.4.70 லட்சத்தை மீட்டுக்கொடுத்த போலீஸ்!

திருப்பதியில் சமீபத்தில் நடைபெற்ற போலீஸ் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், மகள் ஜெஸ்ஸியை டி.எஸ்.பி சீருடையில் பார்த்த சுந்தர், சல்யூட் அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கண்களில் நீர் தேங்கி நிற்க, பெருமையுடன் மிகவும் கம்பீரமாக டி.எஸ்.பி-யான தனது மகளுக்கு சுந்தர் சல்யூட் அடித்த நிகழ்வை நெட்டிசன்களும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துவருகிறார்கள். ஜெஸ்ஸி பிரசாந்தி ஒரு பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

இது குறித்து டி.எஸ்.பி ஜெஸ்ஸி பிரசாந்தி கூறுகையில், ``குழந்தைப் பருவத்திலிருந்தே நாங்கள் நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று பெற்றோர் அறிவுறுத்திவந்தனர். என்னுடைய தந்தைக்கு நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத் தேர்வாக வேண்டும் என்பதே விருப்பம். ஆனால், நான் மத்திய அரசுப் பணியின் தேர்வில் தேர்வாகவில்லை.

டி.எஸ்.பி மகள் - இன்ஸ்பெக்டர் தந்தை

பின் ஆந்திர அரசுப் பணித் தேர்வு எழுதி குரூப் 1-ல் வெற்றி பெற்றேன். கடந்த 2018-ம் ஆண்டு முதல் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றிவருகிறேன். என் தங்கை ஆந்திரா அரசு பல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/viral/a-police-inspector-salutes-his-dsp-daughter-at-tirupati

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக