Ad

சனி, 2 ஜனவரி, 2021

தடுப்பூசிக்கு ஒப்புதல்: `கோவிட் இல்லா தேசம்.. முக்கிய திருப்புமுனை!’ - பிரதமர் மோடி

இந்தியாவில் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதாக, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அவசர கால தேவைகளுக்கு இந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை தொடர்ந்து இரண்டாவது நாடாக இந்தியா கோவிஷீல்டு மருந்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஷில் பராமரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

``தடுப்பூசியில் சிறிதளவு பாதுகாப்பு சிக்கல் இருந்தால்கூட நாங்கள் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை. லேசான காய்ச்சல், வலி மற்றும் ஒவ்வாமை போன்ற சில பக்க விளைவுகள் எல்லா தடுப்பூசிக்கும் பொதுவானவை” என இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஜெனரல் வி.ஜி. சோமானி தெரிவித்தார்.

தடுப்பூசி

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ``கொரோனாவுக்கு எதிரான யுத்ததில் நமக்கு பலம் சேர்க்கும் முக்கிய திருப்புமுனை இந்த தடுப்பூசி. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது ஆரோக்கியமான வாழ்வுக்கு இட்டுச் செல்லும். மேலும் கோவிட் இல்லா தேசத்துக்கும் இது வழிவகை செய்யும். வாழ்த்துகள் இந்தியா.. கடின உழைப்பை வெளிப்படுத்திய விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் ” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: `கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி!' - இந்திய தலைமை மருந்து கட்டுப்பாடு அமைப்பு #NowAtVikatan



source https://www.vikatan.com/government-and-politics/politics/prime-minister-modi-shares-his-happy-for-the-approval-of-vaccine-for-corona-virus-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக