Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ஊர்க்காவல் படை வீரருக்கு 5 ஆண்டு சிறை

நீலகிரி மாவட்டம் ஊட்டி பாம்பேகேசில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். 35 வயதான இவர், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். ஊட்டி அருகில் உள்ள தலையாட்டுமந்து பகுதிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்தப் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 12 வயது சிறுமியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

சிவப்பிரகாசம்

இது போன்று அடிக்கடி அங்கு சென்று வந்த சிவப்பிரகாசம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி அந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Also Read: சென்னை: `பாலியல் தொல்லை; கூலிப்படை ஏவி மருமகனைக் கொன்ற மாமியார்!' - ஓராண்டுக்குப் பிறகு கைது

விசாரணை மேற்கொண்டு சிவப்பிரகாசத்தை கைதுசெய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவப்பிரகாசம்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தற்காக சிவப்பிரகாசத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.50,000 அபராதம் விதித்தும் நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டார்.



source https://www.vikatan.com/news/crime/ooty-court-sentenced-5-years-to-home-guard-man-in-sexual-harassment-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக