Ad

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

`அதிவேக பயணம்... ஃபைன் கட்டுங்க’ ; பார்க்கிங்கில் நின்ற காருக்கு வந்த நோட்டீஸ் - திகைத்த உரிமையாளர்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பலரும் போலீஸில் சிக்கி அபராதம் செலுத்தியிருப்பர். ஆனால் இதுவே நீங்கள், உங்கள் காரை முறையாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பவந்து பார்க்கும்போது, `48 கி.மீ வேகத்துல செல்லக்கூடிய சாலையில், உங்க கார் 88 கி.மீ வேகத்துல போயிருக்கு, அபராதம் காட்டுங்க-னு' உங்களுக்கு கடிதம் வந்தா எப்படியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான், இங்கிலாந்தில இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா போய்ட்டு ஊர் திரும்பிய தம்பதியினருக்கு நடந்திருக்கிறது.

கார்

கேரி தோர்ன்பன், க்ளாரே பியர்ட்ஸ் (Gary Thornburn, Clare Beards) தம்பதியினர், கடந்த 3-ம் தேதியன்று, இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து, ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர். இவர்கள் விமான நிலையத்திலிருந்து புறப்படும் அன்றே, தங்களது காரை விமான நிலைய பார்கிங்கிலேயே நிறுத்திவிட்டு, கார் சாவியை விமான நிலைய ஊழியரிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 16 அன்று ஊர் திரும்பிய தம்பதியினருக்கு, `தங்களுடைய கார், 48 கி.மீ வேகத்துல செல்லக்கூடிய சாலைல, 88 கி.மீ வேகத்துல போயிருக்கு, இதற்காக அபராதம் கட்டவேண்டும்' என அதே காரின் நம்பர் பிளேட்டுடன் கூடிய காரின் படம் அடங்கிய காவல்துறையின் கடிதம் வந்திருக்கு. இதனால் குழப்பமடைந்த தம்பதியினர் இருவரும், உடனடியாக மான்செஸ்டர் காவல்துறையை அணுகி இதுபற்றி தெரிவித்தனர்.

கார்

பின்னர் இதுகுறித்து பேசிய விமான நிலைய செய்தித் தொடர்பாளர், ``இது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எத்தகைய மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதுகுறித்த செய்தி கேட்டவுடனேயே, நாங்கள் விசாரிக்கத் தொடங்கினோம். மேலும், வாடிக்கையாளர் திரும்ப வரும் வரையில் கார் சாவி பத்திரமாகத்தான் இருந்தது" என தெரிவித்திருக்கிறார். மேலும், காவல்துறையின் அபராத கடிதத்தில் இருந்த காரின் படம், தம்பதியினரின் காரின் படத்துடன் வேறுபட்டது என்று மான்செஸ்டர் விமான நிலையம் தெரிவித்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/speeding-fine-for-not-driving-couple-holidaying-abroad-issued-ticket-for-their-parked-car-back-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக