Ad

சனி, 22 ஆகஸ்ட், 2020

காதலுக்கு அபராதம்! - கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகளும் பின்னணியும்!

நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள அன்னப்பன்பேட்டை கிராமத்தில், காதலித்து வீட்டைவிட்டு வெளியேறிய இரண்டு பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.18,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்தாரின் அந்தத் தீர்ப்பைத் தட்டிக்கேட்ட மூன்று குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கிவைத்துவிட்டனர். இதுபற்றி மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை.

''மாற்று சாதி திருமணம் கூடாது!''

தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பார் முதல் பெரியதாழை வரை 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்துக்குக் கொஞ்சமும் சளைத்தவையல்ல தூத்துக்குடி மாவட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்துகள்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மீனவக் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு, 'மாற்று சாதி ஆண்களைக் காதலித்து திருமணம் செய்த பெண்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்' என அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், காதல் திருமணம் செய்த 14 பெண்களை வெளியேற வலியுறுத்தினார்கள்.

இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால், அந்தத் தீர்மானத்தை ஊர் கமிட்டியினர் ரத்துசெய்தார்கள். திருச்செந்தூர் அருகிலுள்ள அமலிநகர் கிராமத்தில், மின்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தில், '100 ரூபாயில் 2 ரூபாய்' ஊரின் வளர்ச்சிக்கு வரியாக ஊர் கமிட்டிக்குக் கொடுத்துவிட வேண்டும். இதை வசூல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் ஊர் கமிட்டியிடம் வரிப்பணம் குறித்து ஒரு தரப்பினர் கணக்கு கேட்டார்கள். இதில் மோதல் ஏற்பட்டுவிட்டது. கணக்கு கேட்ட 60 குடும்பத்தினர் ஊர்விலக்கம் செய்யப்பட்டனர். அந்த அதிருப்தியில் அனைவரும் பா.ஜ.க-வில் சேர்ந்ததால் சிக்கல் மேலும் அதிகரித்து, விஷயம் வெட்டு குத்து வரை சென்றுள்ளது.

'நெய்தல் மக்கள் இயக்க'த்தின் குமரி மாவட்டச் செயலாளரான குறும்பனை சி.பெர்லினிடம் பேசியபோது, "பொதுவாக, கிராமப் பஞ்சாயத்துகள் மூலம் கடலோர கிராமங்களின் பாரம்பர்யம் பாதுகாக்கப்படுகிறது. மீனவர்களுக்குள் ஏற்படும் சிறிய உரசல்கள்கூட கிராம கமிட்டிகள் மூலமே தீர்க்கப்படுகின்றன. இது போன்ற வலுவான பஞ்சாயத்து அமைப்புகளுடன் மீனவக் கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதை உடைக்கும் நோக்கிலேயே சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை உள்ளிட்டவை கொண்டுவரப்படுவதாகச் சந்தேகிக்கிறோம்" என்றார்.

- 'சோத்துக்கு உப்பு நல்லதுதான்; அளவுக்கு மிஞ்சிப் போச்சுன்னா தின்ன முடியாது சார்!' அந்த மீனவர் சொன்ன உதாரணம் சரிதான். மீனவக் கிராம மக்களின் நலனுக்காக, அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்காக உருவான 'கிராமக்குழு, 'கிராமப் பஞ்சாயத்து' போன்ற அமைப்புகளில் இன்று அதிகாரம் மிகுந்து, கட்டப் பஞ்சாயத்துகளாக மாறி அந்த மக்களுக்கே ஆபத்தாகக் குறுக்கே நிற்கின்றன.

இந்த அமைப்புகளிலிருக்கும் ஒரு சாரார் மனிதாபிமானமற்ற முறையில் செயல்படுவதால், அப்பாவி மக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தமிழகம் முழுக்கவுள்ள கடலோரப் பகுதிகளில் புகார்கள் எழுகின்றன.

இதுதொடர்பான அதிரவைக்கும் செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/31jb5TV > கடலோரக் கட்டப் பஞ்சாயத்துகள்... தனிச் சட்டம்... தனி ராஜாங்கம்! https://bit.ly/31jb5TV

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV



source https://www.vikatan.com/news/crime/coastal-districts-panchayat-and-the-controversial-governing-decisions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக