விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அதன்படி, நேற்று வானூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை ஈடுபட்ட சி.வி.சண்முகம், "அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால்... அதாவது, பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த காரணத்தால் தான் சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக நாம் இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் 14,000 வாக்குகளில் தான் தி.மு.க ஜெயிக்கிறது. அங்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிட்டத்தட்ட 20,000 உள்ளது. அதில் 18,000 சிறுபான்மையினரின் வாக்குகள் விழுப்புரம் நகராட்சியில் மட்டுமே இருக்கிறது. விழுப்புரம் நகராட்சியில் மட்டும் நமக்கு 16,000 வாக்குகள் குறைந்துள்ளது. ஆனால், தி.மு.க 14,000 வாக்குகளில் தான் வெற்றி பெற்றது. ஆக, இது ஒரு உதாரணம்.
சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் சில காரணங்களால் நாம் இந்த தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அப்படி இல்லை என்றால்... இன்றைக்கு திமுக ஆட்சியிலேயே இல்லை. அப்படியே அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சியை தான் அமைத்திருக்க முடியும்.
ஆகவே, இதில் நம் இடத்திலே குறையும் உள்ளது. 'அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். தி.மு.க-விற்கு மக்கள் அமோகமாக ஆதரவு அளித்துவிட்டார்கள்' என யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் இன்றும் தயாராக உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சியை அமைப்பதற்கு மக்கள் தயாராக இருக்கின்றனர்.
Also Read: ``மோடியே பார்த்து பயப்படுகிற ஓர் அரசியல்வாதி ஜெயலலிதா” - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
ஆனால், முதலில் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ளவேண்டும்" என்றார் கட்சி நிர்வாகிகளிடம்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/cv-shanmugam-said-that-the-defeat-of-aiadmk-was-due-to-the-alliance-with-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக