Ad

சனி, 24 ஜூலை, 2021

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்துக்கு தீவிர சிகிச்சை... உடன் பயணித்த தோழி மரணம்!

பிரபல நடிகையும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவருமான யாஷிகா ஆனந்த் கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். அவருடன் பயணித்த தோழி மரணம் அடைந்த நிலையில் யாஷிகா ஆனந்த்தும் 'critical care' -ல் திவீர சிகிச்சை பெற்றுவருகிறார்.

நேற்று இரவு யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழிகளுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்த்தின் மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக யாஷிகா ஆனந்தின் தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசினோம். ''நான் இப்போது டெல்லியில் இருக்கிறேன். யாஷிகாவின் நிலை கிரிட்டிக்கலாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நான் சென்னைக்கு விரைந்துகொண்டிக்கிறேன்'' என்று சொன்னார்.

யாஷிகா பயணித்த கார்

இந்த பயங்கர விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாஷிகா ஆனந்த் 'கவலை வேண்டாம்', 'துருவங்கள் பதினாறு', 'ஜோம்பி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவர் பிரபலமானார்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actress-yashika-anand-met-with-car-accident-and-in-critical-care

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக