Ad

திங்கள், 5 ஜூலை, 2021

'வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்கதான்!' - கோவை போலீஸிடம் அலப்பறை செய்த போதை ஆசாமிகள்

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, பட்டாசு வெடித்து டாஸ்மாக் கடை திறப்பை `குடி'மகன்கள் கொண்டாடினர்.

போலீஸிடம் அலப்பறை செய்யும் போதை ஆசாமிகள்

Also Read: திருமழிசை: ஓசி பிரியாணிக்குத் தகராறு... பெட்ரோல் குண்டுகளை வீசிப் பதறவைத்த போதை ஆசாமிகள்!

டாஸ்மாக் திறக்கப்பட்ட முதல் நாளே காந்திரபுரம் பகுதியில் போதை ஆசாமி ஒருவர், தட்டித் தடுமாறி சாலையில் உருண்டு, புரண்டு பேருந்து ஏறிய வீடியோ வைரல் ஆகியிருந்தது.

இந்நிலையில், கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு போதை ஆசாமிகள் போலீஸாருடன் ரகளையில் ஈடுபட்டு அலப்பறை செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்களை போலீஸார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், காவல்நிலையத்தில் ரகளை செய்து, இருவரும் வெளியில் ஓடிவிட்டனர். போலீஸார் எச்சரித்தபோதும் அவர்கள் இறங்கி வருவதாய் இல்லை.

போதை ஆசாமி சண்டை

‘நாங்க என்ன திருடினோமா? என்ன தப்பு பண்ணோம் தலைவரே..? சொல்லுங்க.. விடுங்கங்க’ என்று துள்ளியுள்ளனர். போலீஸார் வீடியோ எடுப்பது தெரிந்தவுடன் அதில் ஒரு போதை ஆசாமி, மற்றொரு போதை ஆசாமியை அடிக்கவும் செய்தார்.

அடிவாங்கிய போதை ஆசாமி, ‘பப்ளிசிட்டிக்காக பண்றாங்கப்பா..’ என சொல்லி சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டார். பிறகு கேமராவை பார்த்து, ‘சார்.. வணக்கம் சார்… வீரப்பனுக்கு ஆயுதங்களை கடத்தியதே நாங்க தான். உ.. ஊ..’ என்று நக்கலாக பேசினார். போதை ஆசாமிகளிடம் சிக்கி குழம்பிய போலீஸார்,

போதை ஆசாமி

ஒருகட்டத்தில் அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டனர். ரகளையில் ஈடுபட்ட நபர்கள் கிட்டாம்பாளையம் கிராமத்தை ராஜேந்திரன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-drunkards-police-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக