Ad

வெள்ளி, 22 ஜனவரி, 2021

'அடையாற்றின் மற்றோர் ஆலமரம்’... மருத்துவ தேவதை சாந்தா..! #RIPShanta | Video | Aval Vikatan

சென்னை அடையாறு என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புற்றுநோய் நிறுவனம். லட்சக்கணக்கான புற்றுநோயாளிகளைக் குணப்படுத்திய இந்த நிறுவனத்துக்கு, நாள்தோறும் நூற்றுக்கணக்கான புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவர் மருத்துவர் சாந்தா.

ஜவஹர்லால் நேரு முதல் இன்றைய இந்திய அரசியல் பிரபலங்கள் வரை அனைவரின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்றுள்ள சாந்தா, தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக ஆசியாவின் உயரிய விருதான `மகசேசே’ விருது உட்பட இந்தியாவின் உயரிய விருதுகள் அனைத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடையாற்றின் மற்றோர் ஆலமரம்போல புற்றுநோய் நிறுவனத்தை விருட்சமாக உருவாக்கிய சாந்தாவின் மரணம், மருத்துவ உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே கருதப்படுகிறது.



source https://www.vikatan.com/women/tribute-to-adyar-cancer-institute-chairperson-dr-shanta

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக