Ad

வியாழன், 21 ஜனவரி, 2021

`தமிழகத்தில் 908-வது நபராக கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளேன்!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்  விஜயபாஸ்கர்!

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் சுகாதாரப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொள்கிறார்கள். எனினும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒரு அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில்தான் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், `தமிழகத்தில் 908-வது நபராக கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொள்கிறேன்’எனத் தெரிவித்தார். மேலும் கோவிட் 19 தடுப்பூசி போட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/general-news/22-01-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக