Ad

வியாழன், 30 ஜூலை, 2020

Corona Live Updates: `ஒரே நாளில் 6,42,588 மாதிரிகள் பரிசோதனை!’ - இந்தியாவில் 16 லட்சத்தை கடந்த பாதிப்பு

இந்தியாவில் 16 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,38,871 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 55,079 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,747 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,57,806 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,88,32,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 6,42,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/3172020-corona-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக