Ad

புதன், 29 ஜூலை, 2020

கோவை பெரியார் சிலை விவகாரம் - பாரத்சேனா நிர்வாகி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக, கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து, கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர் காவி சாயம் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பெரியார் சிலை

Also Read: கோவை: பெரியார் சிலைக்கு காவிச் சாயம்! - தொடரும் போராட்டம்; வலுக்கும் கண்டனம்

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணன் (21) என்பவர் போலீஸில் சரணடைந்திருந்தார்.

Also Read: மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்; குடும்பத்துடன் சண்டை! கோவை கோயில்களை சேதப்படுத்திய கஜேந்திரன்

கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் சுரேந்திரன், செந்தில்வாசன் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. பெரியார் சிலை காவி சாயம் ஊற்றப்பட்டப் பிறகு, கோவையில் சில கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுதொடர்பாக, கஜேந்திரன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். `அவர் எந்த கட்சி அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்’ என்றும் போலீஸார் கூறியிருந்தனர்.

பெரியார் சிலை

இந்நிலையில், அருண் கிருஷ்ணனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது வீட்டுக்கு சென்றும் போலீஸார் விசாரித்தனர்.

அருண் கிருஷ்ணன் ஏற்கெனவே சிறையில் உள்ள நிலையில், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள அருண் கிருஷ்ணனுக்கு நேற்று மாலை வழங்கப்பட்டது.

சுமித் சரண்

அருண் கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மீது நடவடிக்கை எடுத்ததை, திராவிட கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-periyar-statue-issue-police-books-bharat-sena-cadre-in-nsa

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக