Ad

திங்கள், 27 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `போலீஸுடன் ஏற்பட்ட பிரச்னையில் சிறையிலைடப்பு; மரணம்!’ - தமிழக அரசு

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்தது. 

Also Read: சாத்தான்குளம்: விரிவடையும் மகேந்திரனின் வழக்கு விசாரணை- விழிபிதுங்கும் போலீஸார்!

அதன்படி, நிவாரண உதவியை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்து நேரில் வழங்கினார். அதன் பின்னர் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி மற்றும் குழந்தைகளுக்கு அம்மை நோய் போட்டதால் பணி நியமன ஆணையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

Also Read: சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு... மறு பிறப்பு எடுக்கும் புதிய கொலை வழக்கு...

உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு பணி நியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் அவருக்கு, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கான ஆணை வழங்கப்பட்டது. 

பணி நியமன ஆணை வழங்கும் முதல்வர்

பணி நியமன ஆணையில்,``ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் காவல்துறையினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகக் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தபோது அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ் 22-ம் தேதியும் ஜெயராஜ் 23-ம் தேதியும் இறந்துவிட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தாக்குதல் காரணமாக இருவரும் உயிரிழந்ததாகப் போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. 

பணி நியமன ஆணையில் இடம்பெற்றுள்ள சர்ச்சை

அரசு வழங்கியுள்ள பணி நியமன ஆணையில் இருவருக்கும் சாத்தான்குளம் போலீஸாருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்தத் தகவல் சாத்தான்குளம் வியாபாரிகளுக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/government-issued-job-order-to-the-deceased-jeyarajs-daughter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக