உலகம் முழுவதும் கொரோனா பரவல் எண்ணிக்கை 1.70 கோடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் 6 லட்சத்தைக் கடந்துவிட்டன. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடிக்கு மேல் உள்ளது. இருந்தாலும் இந்த கொடிய வைரஸின் ஆபத்தைக் குறைப்பது நம் தனி மனிதரின் பொறுப்பு என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெனீவானில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், ``உலகளவில் கிட்டத்தட்ட பத்து மில்லியன் கொரோனா வழக்குகள் 10 நாடுகளில் பதிவாகியுள்ளன. அதில் பாதி வழக்குகள் மூன்று நாடுகளில் மட்டுமே உள்ளன. வயதானவர்களுக்குக் கடுமையான நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருந்தாலும் அதே அளவிலான ஆபத்து இளைஞர்களுக்கும் உள்ளது.
Also Read: கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை
இந்த ஆபத்து குறித்து இளைஞர்களை நம்பவைப்பது நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக உள்ளது. வடக்கு நாட்டில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் பாதுகாப்பைக் கைவிடுவதால் அங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதற்கான சான்று எங்களிடம் உள்ளது. நாங்கள் முன்பே சொல்லியிருக்கிறோம் இருந்தும் மீண்டும் சொல்கிறோம், இளைஞர்கள் வெல்ல முடியாதவர்கள் இல்லை. அவர்களுக்கும் தொற்று ஏற்படலாம் அதனால் உயிரிழக்கலாம்.
மேலும் இதை விட மோசமாக இளைஞர்கள்தான் வைரஸ் பரவலை அதிகரிக்கவைக்கின்றனர். எனவே இளைஞர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களைப் போல முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். தலைவர்களாக இருந்தாலும் முன்னெச்சரிக்கை அவசியம். அவர்கள்தான் மாற்றத்தின் இயக்கமாக இருக்க வேண்டும். கோவிட்-19 வெளிப்படுத்தும் அபாயத்தைக் குறைப்பதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது என்பதை ஒவ்வொரு தனி மனிதரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பேசியுள்ளார்.
Also Read: WHO: `கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது!’ - டெட்ரோஸ்
source https://www.vikatan.com/news/international/younger-people-are-at-riskwho-has-said
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக