Ad

வியாழன், 30 ஜூலை, 2020

`பிரபஞ்ச சக்தியை உடலில் வளர்க்கும் மெய்யடக்கப் பயிற்சி!’ - சக்தி விகடனின் ஆன்லைன் வகுப்பு

உடலை உறுதி செய்வதென்பதன் மூலம் உயிரை உறுதி செய்யலாம் என்பதே சித்தர்கள் நமக்கு அருளிய வழி. இறையருளால் பெற்ற இந்த உடல் இயந்திரத்தைப் பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியத்திலும் ஆன்மிகத்திலும் மேன்மையான நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் பிறவிக்கான குறிக்கோள். அதை நிறைவேற்றவே சித்த புருஷர்கள் சில பயிற்சிகளையும் யோகமுறைகளையும் நமக்காக உருவாக்கித் தந்துள்ளனர்.

மெய்யடக்கப் பயிற்சி

பிரம்ம சக்தியும், பஞ்சபூத சக்திகளும் நம் உடலுக்குள்ளும் உயிருக்குள்ளுமாய் நிறைந்திருக்கின்றன. உடலுக்குள் பஞ்சபூதங்களின் தன்மை சீராக இருக்கும் பட்சத்தில் உடலின் இயக்கமும் உயிரின் வலிமையும் பல மடங்காக உயரும். உடலில் இருக்கும் 72,000 நாடிகளை முறையான பயிற்சிகளின் மூலம் தூண்டிப் பிரபஞ்ச சக்தியை உடலில் வளர்ப்பதன் மூலம் நீண்ட ஆரோக்கியத்தையும் நீடித்த வாழ்வையும் பெற முடியும். அதற்கான பயிற்சிகளையே மெய்யடக்கப் பயிற்சிகள் என்று சொல்கிறோம்.

Also Read: `சித்தர்கள் அருளிய பயனுள்ள 10 பயிற்சிகள்!'- சக்திவிகடனின் மூச்சுப் பயிற்சிப் பயிலரங்கம்

சக்திவிகடனும் உலக சித்தக் கலை மற்றும் ஆய்வு மையமும் இணைந்து வாசகர்களுக்கு இணையம் மூலம் யோகப் பயிற்சிகளை தேகம், தெய்விகம் என்னும் தலைப்பில் வழங்கிவருகிறது. கடந்தமுறை நடைபெற்ற வகுப்பில் வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு மூச்சுப்பயிற்சியினைக் கற்றுத் தேர்ந்தார்கள். பயிற்சிக்குப் பின்னான தனிப்பட்ட சந்தேகங்களையும், ஆய்வு மையத்தின் தலைவரான அரியிடம் கேட்டுத் தெளிவு பெற்று வருகிறார்கள். இந்த முறை அரி, வாசகர்களுக்கு 30 மெய்யடக்கப் பயிற்சிகளை மிகவும் குறைவான கட்டணத்தில் கற்றுத்தர இருக்கிறார். இந்தப் பயிற்சிகள் உடலை வலுப்படுத்துவதோடு, நோய்களிலிருந்து விடுபடும் ஆற்றலையும் நமக்கு அளிப்பவை.

மெய்யடக்கப் பயிற்சி

வரும் ஞாயிறு அன்று (2.8.20) மெய்யடக்கப் பயிற்சி வகுப்பு மாலை 7 மணி முதல் 8.30 வரை ஆன்லைன் மூலம் நடக்க இருக்கிறது. அனைத்து வயதினரும் கற்றுப் பயன்பெற வேண்டிய பயிற்சிகளை குருபரம்பரை வாயிலாகக் கற்ற உலக சித்தக் கலைகள் ஆய்வுமையத் தலைவர் அரி சொல்லித்தர இருக்கிறார். நீங்களும் பங்கு கொண்டு பயன்பெற வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

https://store.vikatan.com/events/69-yoga-training/?fbclid=IwAR3K-VjelqLaNszvUEKhboRrTaOibFNpx5n2h4o3miURwjxseoZ639I-hMA



source https://www.vikatan.com/events/editorial/yoga-online-event-by-sakthi-vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக