Ad

திங்கள், 27 ஜூலை, 2020

சென்னை: தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி! - மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம்

`பிரண்ட்ஸ்' படம் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் தமிழ் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே நீண்டகாலமாக இணையதள மோதல் இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்திருந்தார்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்

அதில் `வாழ்த்துகள்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நான் சீமானை சந்தித்தேன். பின்னர் அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதன் பேரில் அவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார் எனப் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் தன்னை மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி யூடியூப் வீடியோக்களைப் பதிவு செய்து வந்தார்.

இந்தநிலையில், ``நடிகை விஜயலட்சுமி அவர்களே... நாவை அடக்குங்கள். சீமான் அவர்கள் எனது ரத்தம்!” எனப் பனங்காட்டு படைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் ரத்த அழுத்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும், இதற்கு காரணம் சீமானும் அவரது நாம் தமிழர் கட்சியினரும்தான் என்றும் என்னை இழிவுபடுத்திப் பேசிய ஹரிநாடார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இதுதான் எனது கடைசி வீடியோ எனவும் கூறியிருந்தார்.

நடிகை விஜயலட்சுமி

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு நடிகை காயத்ரி ரகுராம் சென்றுள்ளார். அப்போது அவர் ஃபேஸ்புக் வீடியோவில் பேசியபடி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். நடிகை விஜயலட்சுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சென்னை திருவான்மியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்று சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்திரேட் வெங்கடேசன் வாக்குமூலம் பெற்றார். அந்த ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

நடிகை விஜயலட்சுமி

இதுகுறித்து சீமானிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்பு கொண்டோம். நடிகை விஜயலட்சுமி குறித்து விரிவாகப் பேசுவதாகக் கூறினார். அவரின் விளக்கத்தையும் வெளியிட தயாராக உள்ளோம்.

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/magistrate-investigated-on-actress-vijayalakshmi-suicide-attempt-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக