தேனி நகராட்சியின் 3வது வார்டு பாலன் நகர் பகுதி தற்போது சுகாதாரத்துறை மற்றும் நகராட்சியின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தெருவின் சாலைகள் கட்டைகளைக் கொண்டு அடைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது, ஏன் ஒரு தெருவை மட்டும் மூடியுள்ளனர் என விசாரித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
Also Read: தேனி: `பலமணி நேரக் காத்திருப்பு; வராத ஆம்புலன்ஸ்’ - கொரோனா பாதித்தவரை விரட்டிய மக்கள்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர், துக்க நிகழ்வுக்கு, பாலன் தெருவைச் சேர்ந்த சிலர், ஷேர் ஆட்டோவில் பயணித்து துக்க நிகழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அடுத்த சில நாள்களில், அதில் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்படவே, மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அப்போது, அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவரிடம் சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில், துக்க நிகழ்வுக்குச் சென்றது குறித்தும், தன்னுடன் 10 பேர் ஒரே ஆட்டோவில் பயணித்த விவரத்தையும் கூறியுள்ளார்.
அந்தத் தகவலை சேகரித்த சுகாதாரத்துறையினர், அந்த நபருடன் ஆட்டோவில் பயணம் செய்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய, அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களின் குடும்பத்தார், பக்கத்துவீட்டில் வசிப்பவர்கள் என ஒரே தெருவில் 46 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சாலைகளில் குளோரின் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தேனி நகர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக இடைவெளி பற்றிய கவலை இல்லாமல் ஒரே ஆட்டோவில் 10 நபர்கள் பயணித்தது, தற்போது ஒரு தெருவையே கொரோனா ஹாட் ஸ்பார்ட்டாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: தேனி: கொரோனாவிலிருந்து மீண்டவர்; வீட்டில் தனிமை! தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்
source https://www.vikatan.com/news/general-news/corona-affects-46-people-on-one-street-in-theni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக