Ad

வியாழன், 30 ஜூலை, 2020

`கோவை மாவட்டம் முதலிடம்’ - தமிழகத்தில் வெளியானது ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள்! #NowAtVikatan

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04% பேர் தேர்ச்சி பெறுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளின் படி 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.10 சதவிகிதத்துடன் கோவை முதலிடம் பெற்றிருக்கிறது

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து புதிய உத்தரவு அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது.



source https://www.vikatan.com/news/general-news/31-07-2020-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக