Ad

செவ்வாய், 28 ஜூலை, 2020

கொரோனா: `தவறான ரிசல்ட்; கோடிக்கணக்கில் வசூல்!’- திருச்சி ஆய்வகத்துக்கு சீல்

திருச்சியில் உள்ள டயக்னாஸ்டிக் சென்டர் கொரோனா நோயாளிகளுக்குத் தவறான தகவல்களை அழித்ததால், அந்த பரிசோதனை மையத்திற்கு ஆட்சியர் சீல் வைத்ததோடு, ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரிசோதனை கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைப்பு

திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்கிற பரிசோதனை மையம் செயல்பட்டு வந்தது. திருச்சியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இணைந்து இந்த பரிசோதனை மையத்தை நடத்தி வருகிறார்கள். இங்கு ரத்த டெஸ்ட், ஸ்கேன் மற்றும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா டெஸ்ட் இப்பரிசோதனை மையத்தில் எடுக்கப்பட்டு வந்தது. இங்கு டெஸ்ட் எடுக்கவரும் மக்களிடம் முடிவுகளைத் தாமதமாக அறிவிப்பதாகவும், அப்படி அறிவிக்கும் பரிசோதனை முடிவுகள் தவறாக இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, இந்த சென்டரில் பரிசோதனை மேற்கொண்டால் கொரோனா இல்லாதவர்களுக்கும் (கொரோனா இருப்பதாகவும்) பாசிட்டிவ் என ரிசல்ட் கொடுத்திருக்கிறார்கள். இதில் பல மருத்துவர்களோடு கொரோனா ட்ரீட்மென்ட் பார்த்ததில் கோடிக்கணக்கில் வசூல் செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பரிசோதனை கூடத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்

பின்னர், இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த பரிசோதனையை மையத்தையும், அது செயல்பட்டு வந்த நான்கு மாடிக் கட்டடத்துக்கும் சீல் வைத்தனர்.

சீல் வைப்பு

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், ``கொரோனா டெஸ்ட் எடுக்க வரும் பொதுமக்களுக்குப் பரிசோதனை முடிவுகளைக் காலந்தாழ்த்தி தாமதமாகப் பரிசோதனை முடிவுகளை வழங்கியிருக்கிறார்கள். இதனா, நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க முடியாமல் போனதால் பல பிரச்சனைகளைச் சந்தித்தாக தகவல் வந்தது.

இதுதொடர்பாக அந்த டயக்னாஸ்டிக் சென்டருக்கு ஐந்து முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு உரியப் பதில் அளிக்காததால் கோவிட் பரிசோதனை மையத்தின் உரிமையை ரத்து செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. விதிமுறை மீறி இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் கட்டத்தையும் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன்.அத்தோடு ஐந்து லட்சம் அபாரத்தை விதித்திருக்கிறேன்’’ என்றார்.

திருச்சி கலெக்டர் சிவராசு

Also Read: WHO: `கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது!’ - டெட்ரோஸ்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்திகேயன்,``இந்த டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா நோயாளிகள் இந்த பரிசோதனை கூடத்தில் டெஸ்ட் எடுத்த போது அதிக பணத்தை வசூலிப்பதோடு, பல பேருக்கு கொரோனா பாசிடிவ் இருப்பதாகவும் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். அந்த நோயாளிகளுக்கு கொரோனா ட்ரீட்மென்ட் பார்த்ததில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாகத் தெரியவந்துள்ளது.

சீல் வைப்பு

இது மட்டுமில்லாமல் `டெங்கு பாசிட்டிவ்’ ரிசல்ட்டுகள் வருவதும், பின்னர் அதே நோயாளிகள் அரசு மருத்துவமனையில் பரிசோதிக்கப்படும்போது `நெகட்டிவ்’ என்று ரிசல்ட் வருவதும் தொடர்கதையாக நடந்திருக்கிறது. இதையடுத்து, மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் இந்த நிறுவனத்தை மூடி `இதற்குமேல் டெங்கு பரிசோதனைகள் செய்யக்கூடாது’ என்று உத்தரவிட்டார்கள். இப்போது அதே மாதிரியான சம்பவங்கள் கொரோனா விஷயத்திலும் தொடர்ந்து நடந்திருக்கிறது. அதனால், சீல் வைத்திருக்கிறார்கள்’’ என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/trichy-officials-sealed-private-lab-over-wrong-corona-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக