கோவை, ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். இவர், கருமத்தம்பட்டி, அன்னூர் சாலையில் ஸ்பின்னிங் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனிடையே, தொழில் நஷ்டம் காரணமாக சில மாதங்களாகவே விஜயகுமார் விரக்தியுடன் இருந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 28-ம் தேதி ஸ்பின்னிங் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மில்லின் பொது மேலாளளர்தான், விஜயகுமார் தூக்கில் தொங்குவதை முதலில் பார்த்துள்ளார். பிறகு, உறவினர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரது உடலை மீட்டனர்.
Also Read: சென்னை: `என்னோட ராட்சஷிக்கு தகவல் சொல்லிடுங்க!' - ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை
இதுகுறித்து விஜயகுமாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூறுகையில், “விஜயகுமாருக்கு கார் ரேஸில் ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் அவரே கார் ரேஸில் கலந்து கொண்டுவந்தார். பிறகு, அவர் நேரடியாக ஓட்டுவதைத் தவிர்த்து, ரேஸ் கார் ட்யூனிங் செய்வதில் ஆர்வம் காட்டினார். அவரின் ஆர்வம் ரேஸ் கார்களை ட்யூன் செய்வதில் அவரை நிபுணராக மாற்றியது. தொடர்ந்து, கோவையில் ரேஸ் கார் ட்யூன் செய்யும் வொர்க் ஷாப் தொடங்கினார்.
அவர் ட்யூன் செய்த ரேஸ் கார்கள், இன்டர்நேஷனல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், பெங்களூரிலும் அதன் கிளையைத் தொடங்கினார். ஆனால், அங்கு நஷ்டம் ஏற்பட்டதால் அங்கிருந்து மீண்டும் கோவை வந்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அதுவும் கைகொடுக்கவில்லை. ரேஸ், ரேஸ் என்று நிறைய பணம் செலவு செய்துவிட்டார். குடும்பத்தில் ஏதோ பிரச்னை ஏற்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதில் இருந்து காப்பாற்றிவிட்டோம். பிறகு, ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்துக்கு முழுவதுமாக முழுக்கு போட்டுவிட்டு, ஒரு மில்லை போக்கியத்துக்கு எடுத்து நடத்தி வந்தார்.
அதிலும் நஷ்டம் ஏற்பட்டு மனமுடைந்துள்ளார். யாரும் எதிர்பாராத வகையில் அவரின் ஒரே மகனின் பிறந்தநாள் தினத்திலேயே, தற்கொலை செய்துகொண்டு உயிரையும் மாய்த்துக்கொண்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/coimbatore-former-car-racer-commits-suicide
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக